காஞ்சிப் (போன) பெரியவா= "பொய்" சொல்லி மாட்டிக் கொண்ட கதை!
நீங்களே பாருங்கள்! = இதுவா "தெய்வத்தின்" குரல்???
---------------

ஆத்திசூடி:
*அறம் செய விரும்பு
*ஆறுவது சினம்
...
அ, ஆ -ன்னு முதலெழுத்து வரும்!
ட,ண முதலெழுத்தா வராத போது? = ரெண்டாம் எழுத்தா வரும்!

*இடம்பட வீடு எடேல்
*இணக்கம் அறிந்து இணங்கு

இங்க தான் வந்தாரு, நம்ம (மறைந்த) காஞ்சிப் பெரியவா!
அவரு சொன்னாலே போதுமே?
தரவெல்லாம் வேணாமே! "தெய்வத்தின்" குரல் ஆச்சே?

ற -வை => ர -ஆக்கீட்டாரு!:)

*அறனை மறவேல் = அறம் (தர்மத்தை) மறக்காதே!
அதை....
*ஹரனை மறவேல் = சிவபெருமானை மறக்காதே! -ன்னு..
தமிழ் ஆத்திசூடியே மாத்தீட்டாரு:) | Idhar Dekho = http://goo.gl/kCSIAP

இறைவனை மறக்கக் கூடாது தான்!
**ஆனா, அதுக்காக, "பொய்" இட்டுக் கட்டி, தமிழையே மாத்தலாமா?
**இறைவன் = பொய் வடிவானவனா? உண்மை வடிவானவனா?

But, பொய் சொன்னா, "பொருந்தச்" சொல்லணும்-ல்ல?
அங்கே தான் மாட்டிக்கிட்டாரு நம்ம காஞ்சிப் பெரியவா! அது என்ன?:)
---------------

யர | லவ -க்கு ஏற்கனவே வரிகள் வந்துருச்சி!
*இயல்பு அலாதன செய்யேல்
*அரவம் ஆட்டேல்
*இலவம் பஞ்சில் துயில்
*வஞ்சகம் பேசேல்

றன -க்கு இதோ இருக்கு!
*அறனை மறவேல்
*அனந்தல் ஆடேல்

ற -க்கு அப்பறம் ன தானே வரும்?
என்னடா, இங்கிட்டு போய், "அறன்" -> "அரன்" -ன்னு கைய வைக்கிறோமே... அடுத்தாப்புல, "ன" இருக்கே!
ர -க்கு அப்பறம் ன எப்படி வரும்? -ன்னு யோசிக்கத் தெரியல பெரியவாளுக்கு:)))
---------------

பெரியவா, ஏதோ தெரியாம "திருத்தம்" செஞ்சீட்டாரு-ன்னு நீங்க "சமாளிக்க" முடியாது; ஏன்னா..
எல்லாப் பத்திரிகையிலும் எப்படி வருது? பாருங்க!

பெரியவா = மகா ஞானி
*நம்ம மனசுல இருக்குறதைக் கூட, கண்டுபுடிச்சிச் சொல்லும் "சித்தி" பெற்றவர்;
*தில்லியில், நேரு காபி குடிக்கும் போது பேசுவது கூட, காஞ்சியில் ரேடியோ இல்லாமயே கேட்கும்
... இப்படி எத்தனை எத்தனை Media பரப்பல்கள்?

அப்பேர்ப் பட்ட "மகாஞானி", "தெரியாம" தமிழில் கை வச்சிட்டாரு-ன்னு சொல்ல முடியுமா? முடியுமாப்ப்ப்பா?:))

சரி, விடு ஓய்!
அதெல்லாம் "மீடியா" வச்சிச் சரி பண்ணீறலாம்!
தமிழ் "வாத்திகள்", இணையத்தில் உட்கார்ந்துண்டு இருக்காளோன்னோ?
தரவே குடுக்காம, Influence/ Gang வைத்தே சப்பைக் கட்டு கட்டீருவாங்களே?:)

இன்னிக்கி தேதியில் = தமிழ் ஆத்திசூடியே மாத்தியாச்!:)

அட, சென்னை தமிழ்ப் பல்கலைக் கழகமே, "பெரியவா சொல்படி" தான் போட்டிருக்கு:))
பொய் -ன்னு கண் கூடாத் தெரிஞ்சும், எப்படி பொய்யே நிலைச்சிருச்சி பாத்தேளா?:((
---------------

எவரையும் "வெறுக்கும்" நோக்கமன்று!
தமிழ்ச் சிதைவு கண்டு "குமுறும்" நோக்கம் மட்டுமே!

காலங் காலமான தமிழ்ச் சிதைவு போதாதென்று,
இன்னிக்கி வரைக்கும் பல துறைகளில்..
இருக்க-லாம், லாம்/லாம் "ஆய்வு" = அதைப் பரப்பிக் கொண்டுள்ளார்கள்:(

*நாகஸ்வாமி = Dept of Archaelogy, Govt of India | முருகன் என்ற தமிழ்ச் சொல் ம்ருகி என்ற சம்ஸ்கிருதமாய் இருக்க"லாம்".. Hunter, Hunter!
*நரசய்யா = டில்லி வாழ் "தமிழ்"-நாவல் எழுத்தாளர் | மதுரை நகரம் = சம்ஸ்கிருதமா இருக்க"லாம்" | ஹாலவாய் தான் அசல் தமிழ் ஓய்:)

இப்படிப் பல் துறை விற்பன்னர்கள்
இவர்கள் "ஆய்வு" தான் = "அரங்கு" ஏறும்!

*கள்ளழகர் = தமிழ்த் தொன்மத் திருமால்!
மாயோன்; நாம "விஷ்ணு" -ன்னு பேரை மாத்தீட்டாலும், அவா சைவத்தை விட ஒரு பிடி கம்மி; Minority வேற;
சமணத்தை அழிச்சா மாதிரி, அவாளை அழிக்க வேணாம்!

ஆனா, கள்ளழகரே சுப்ரமண்யராம் ஓய்! -ன்னு கெளப்பீருலாமா?:)
காலண்டை மயில் இருக்காம்; வேஷ்டியால் மறைச்சி இருக்காளாம்!:)
மடாதிபதிகள் சொன்னா அரங்கேறீரும்!

உண்மையை விட,"புரளி" எப்படி நின்று போகிறது?
*சிலப்பதிகாரம், தொ.பரமசிவன் முதுநூல் ஆய்வு= நிற்காது
*90 வயது மடாதிபதி சொல்றாரு= நிக்கும்?

ஜகத்குரு!
(மறைந்த) ஸ்ரீ மஹா பெரியவா = நித்தியானந்தா போல் அல்லர்!
உண்மையிலேயே "துறவொழுக்கம்" கொண்டவர்; அதை மதிக்கிறேன்;

ஆனா துறவு-ஒழுக்கத்தைக் காட்டியே, தமிழில் "பொய்களை" அரங்கேற்றி விடலாமா???
Does துறவு have an Universal Licence?
---------------

#டேய் ரவி; ரொம்ப தரவு குடுக்குறதா நினைப்போ? உனக்குத் தான் எல்லாம் தெரியுமோ? அடுத்தவாளுக்கு ஒன்னுமே தெரியாதோ?
@அய்யோ, அப்படி நான் சொல்லவே இல்லையே!:(
#நீ சொல்லலீன்னா என்ன? நாங்க சொல்லுறோம்; அகம்பாவம் புடிச்சவன்டா நீ:))) | பெரியவா "வாக்கு" பொய்க்காதுடா முண்டம்!

தமிழ்ப் பகுபத உறுப்பிலக்கணமே = சம்ஸ்கிருதம் தான்டா!
= http://goo.gl/xCuLjL
*பகுதி்= ப்ரக்ருதி
*விகுதி= விக்ருதி

*அப்போ இடைநிலை? = ஹிஹி;
அங்க தான் Sound Pattern கொஞ்சம் சரியா வரமாட்டேங்குது ஓய்!
என்ன பண்ணி மாத்தலாம்? -ன்னு Deepஆ யோசிக்கணும்!

இது என் குரல் - உன் குரல் இல்லை!
= "தெய்வத்தின்" குரல்!
தெய்வத்தின் குரல் பொய்க்குமா? வாழ்க!:(
தமிழ் ஆத்தி சூடியில்... இன்றும்... "அரனை மறவேல்" தான்!:((
---------------

Reply · Report Post