rozavasanth

rozavasanth · @rozavasanth

26th Oct 2013 from TwitLonger

@arulselvan @r_inba @sicmafia அருள் சொன்னதுபோல் இந்த ஹிந்திப்பாடல் பெருமைக்கு கேட்பது என்பதெல்லாம் ஒரு சிறு எலீட் மக்களின் அடையாளச் சிக்கல் மட்டுமே. ராஜா இந்த கணக்கில் சேர்க்க முடியாத சிறு கூட்டத்திடம் ஒரு மாற்றத்தை கொண்டு வந்திருக்கலாம். அதிலும் 1976லேயே ராஜா இதை மாற்றியதாக சொல்வது சரியல்ல; ̀பயணங்கள் முடிவதில்லை' போன்ற படங்கள் வந்த பிறகு விடலைப்பையன்கள் பெருமைக்கு ஹிந்தி கேட்கும் ரசனையை பறைசாற்றுவது குறைந்தது என்று சொன்னால் நம்பக்கூடியதாக இருக்கலாம்.

ஆனால் அதுவும் முழு உண்மையல்ல. எல்லவற்றிற்கும் மாற்று உதாரணங்கள் தனிப்பட்ட முறையில் கிடைக்கும். மத்திய 80களில் என் திருநெல்வேலி நண்பர்கள் வட்டத்திலேயே ஹிந்திப்பாடல்கள் கேட்பதை பெருமையாக கேட்கும் கேஸ்கள் உண்டு. இப்போது நினைத்தாலும் அந்த அபத்தம் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. ̀ராஜபார்வை' போன்ற படங்கள் வந்த நேரத்தில், ராஜா தந்தததுடன் ஒப்பிடவே முடியாத குப்பைகளை கேட்பதை பெருமையாக கருதிய கூட்டம் உண்டு. இதைவிட அபத்தம் என்னவென்றால் ராஜாவின் சில பாடல்கள் ஹிந்தியிலிருந்து காப்பியடிக்கப்பட்டதாக சொன்ன கேஸ்களும் உண்டு... நம்புங்க! ஆகையால் இந்த கேஸ்கள் எப்போதும் உண்டு. அதன் எண்ணிக்கையும், பலமும் வேறுபடலாம். ̀ஹிந்திக்காரர்களை தமிழ் பாட்டு கேட்க வைத்த' ரஹ்மான் காலத்திலேயே, பாம்பே போன்ற படங்களை ஹிந்தியில்தான் கேட்பேன் என்ற பிடிவாதம் கொண்ட பிரகஸ்பதிகளையும் எனக்கு தெரியும்.

மற்றபடி திரும்ப திரும்ப கட்டுரைகளிலும், ஊடகங்களின் விவரிப்புகளிலும் தொடர்ந்து சொல்லப்படும் ஒரு குறிப்பிட்ட பொய்க்கு மட்டுமே என் எதிர்வினை. திருவிழாக்களில், கல்யாணவீடுகளில் டீக்கடைகளில் ஹிந்திதான் ஒரு காலத்தில் பிரதானமாக ஒலித்ததாகவும, 76க்கு பின் ராஜாமயமானது என்று பீலா விடுகிறார்கள். தமிழகத்தின் எந்த பகுதியிலும் இது உண்மையாக இருக்கும் என்று எனக்கு தோன்றவில்லை.

என்றுமே அப்படி ஒரு ஹிந்தி ஆதிக்கம் இருந்ததில்லை. 76க்கு முன்பு எப்படி பாபி, ஜூலி போன்றவை ஹிட்டானதோ அதே போல 76க்கு பின் ஹம் கிஸிஸே கம் நஹின், குர்பானி, லவ்ஸ்டோரி, ஏக் துஜே கேலியே (கமல் படம்னு காரணம் சொல்லக்கூடாது, ஹிட் என்பதுதான் மேட்டர்), டிஸ்கோ டான்சர், சனம் தெரி கசம், ஹீரோ, சாகர், டார்ஜான் (அந்த ஜில்லேலே.. ஜில்லேலா பாடல்), ஜான்பாஸ், தேசாப், கயாமத் சே கயாமத் தக், மைனே பியார் கியா… இதெல்லாம் ஹிந்தி மோகம் இல்லாத, இந்த ஹிந்திப்பாடல்கள் தமிழில் இருக்கும் பாடல்களுடன் ஒப்பிடமுடியதவை என்ற கருத்து வைத்திருந்த நான் வேற வழியே இல்லாமல் டீக்கடைகளிலும், பொதுவெளி ஒலிபெருக்கிகளில் கேட்டு பழக்கமானவை; பிடிக்கவே பிடிக்காத பாடல்கள் எனக்கு மனப்பாடம் ஆகும் அளவிற்கு பொதுவில் ஒலித்தது. 76க்கும் முன்பும் இந்த போலத்தான் ஹிந்திப்பாடல்கள் ஹிட்டாகின; 76க்கு பின்பும் அதே போலத்தான். நான் சொல்லாத படங்களும் நிறைய இருக்கும். இதில் குர்பானியும், ஹீரோவும் ராஜா உச்சத்தில் இருந்த போது என்னவொரு ஹிட்டாக இருந்தது என்பதை மறக்க முடியாது.

ராஜா வந்து ஹிந்தி ஆதிக்கத்தை ஒழித்தார் என்பதில் இருக்கும் இன்னொரு மகா அபத்தம் என்னவென்றால், ராஜா வந்த பின்னும் 76க்கு முன்னான பாடல்கள் ஒரு ஹிட்பாடல்கள் போன்ற பிரபலத்துடன் மக்களிடையே இருந்தது என்பதுதான். எம்ஜியார், சிவாஜி பாடல்கள் மட்டுமின்றி மற்ற எல்லாரின் பழைய பாடல்களும் ரேடியோ, டீக்கடைகள், கல்யாண வீடுகள், கோவில் திருவிழாக்கள், மெல்லிசை கச்சேரிகளில் பரவலாக ஆதிக்கம் கொண்டிருந்தது. மேலும் எம்எஸ்வி ஒரு முக்கிய இசையமைப்பாளராக மத்திய 80வரை இருந்தார். ஒவ்வொரு வருடமும் மிகப் பெரிய ஹிட்களை டீ.ராஜேந்தர், சங்கர்-கணேஷ், மனோஜ் கியான் போன்றவர்களும் அளித்து வந்தார்கள்.

என்னை பொறுத்தவரையில் ராஜா வந்து ஹிந்தி ஆதிக்கத்திலிருந்து தமிழர்களை காப்பாற்றினார் என்பது ஆதாரமே இல்லாத ஒரு மாயை. அதை மீண்டும் மீண்டும் சொல்லி க்ளிஷேயாக்கிவிட்டார்கள். எவ்வளவு மறுத்தாலும் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். இதில் ராஜாவிற்கு பெருமை எதுவும் இல்லை, ராஜாவின் பெருமையும் மேன்மையும் இதுவல்ல என்பது என் பார்வை.

Reply · Report Post