skpkaruna

SKP KARUNA · @skpkaruna

29th Sep 2013 from TwitLonger

இசைஞானி இளையராஜாவின் ஓநாயும் ஆட்டுக் குட்டியும் பிஜிஎம் ஒலித் தட்டு குறித்து ஒரு ட்விட்லாங்கர்.

நண்பர் மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக் குட்டியும் படம் நம்மையெல்லாம் ஈர்த்ததற்கு முதல் காரணம் இசைஞானி. அந்த அற்புதமான பிஜிஎம் மட்டும் அடங்கிய ஒலித்தட்டை மிஷ்கின் வலைதளத்தில் அவரது இரசிகர்களுக்காக வெளியிட்டதும் பாராட்டத்தக்க ஒன்று.

என்னிடம் சில நண்பர்கள், இசைஞானியின் அந்த ஒலிக் கோர்வையை, (un compressed format) ஒலித் தட்டாக வேண்டும்! கிடைக்குமா? என்று கேட்டார்கள். அதை நான் மிஷ்கினிடம் சொன்ன போது, அவர் சற்றும் தயங்காமல், அதெற்கென்ன! ராஜாவின் இரசிகர்களுக்கு இல்லாததா? என்று சொல்லி, ஒலித் தட்டுகளாகவேத் தருவதாக வாக்களித்தார்.

இப்போது என்னிடம் இசைஞானியின் இரசிகர்களுக்கு கொண்டு சென்று சேர்ப்பித்து விடுங்கள் எனச் சொல்லி 1000 ஒலித் தட்டுகளைத் தந்திருக்கிறார். அதுவும், அதற்கு விலையின்றி, இலவசமாகவே! பெரிய மனசு…

இலவசமாக அதை நான் ஏற்றுக் கொள்ள மறுக்கவே, இசைஞானியுடன் கலந்து பேசி, நண்பர்கள் மனமுவந்து விருப்பத்துடன் தரும் நன்கொடையினை ஒரு சேவை நிறுவனத்திற்கு அளித்து விடும்படி சொல்லியிருக்கின்றனர்.

நண்பர்களே! இப்போது என்னிடம் இருக்கும் இந்த ஓநாயும், ஆட்டுக் குட்டியும் ஒலித் தட்டுகளை எப்படி நான் இசைஞானியின் இரசிகர்களுக்குக் கொண்டு சென்று சேர்ப்பிப்பது என்பதே என் முன் இருக்கும் சவால்!

ஒரு டிவிட்டர் நண்பரின் உதவியோடு ஒரு ஈ.காம் சைட் ஒன்றின் உதவியினை நாடினோம். அவர்களும் இளையராஜாவின் இரசிகர்கள் என்றபடியால், மனமுவந்து முன் வந்துள்ளனர். இதற்கு எந்த சேவைக் கட்டணத்தையும் பெற்றுக் கொள்ளாமல், மிகச் சிறிய அளவில் ஷிப்பிங் சார்ஜ் மட்டும் பெற்றுக் கொண்டு, ஒலித் தட்டுகளை கொண்டு சென்று சேர்ப்பிப்பதாக உறுதியளித்துள்ளனர்.

ஓநாயும், ஆட்டுக் குட்டியும் திரைப் படத்தின் பிஜிஎம் அடங்கிய ஒரிஜினல் ஒலித் தட்டு தேவைப் படுவோர்
www.600024.com என்ற தளத்தில் அதற்கான சுட்டி (கூடிய விரைவில் தெரிவிக்கிறேன்!) வாங்கிக் கொள்ளலாம். நாளை 30.10.2013 திங்கள் முதல், இந்தச் சுட்டி இயங்கும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

அதற்கான ஷிப்பிங் சார்ஜ் எவ்வளவோ அதை மட்டும் நீங்கள் செலுத்தினால் போதும். அதையும் சலுகை விலையில் அளித்துள்ளனர்! மேலும், ஒருவர் அதிக பட்சம் மூன்று ஒலித் தட்டுகளை மட்டுமே வாங்க முடியும். அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்தக் கட்டுப்பாடு.

நண்பர்களே! அந்த தளத்திலேயே, அந்த சேவை நிறுவனத்தின் வங்கி எண் அளிக்கப் பட்டுள்ளது. நீங்கள் எவ்வளவு தரவேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அவ்வளவு ரூபாயை அந்த வங்கி எண்ணுக்கு அனுப்பி வைக்கலாம். அது ஒரு ரூபாய் முதல் எத்தனை ரூபாய் வரையிலும் இருக்கலாம். நூற்றுக்கணக்கான மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளை வைத்து பராமரிக்கும் மிக அற்புதமான தோண்டு நிறுவனம் அது.

ஒலித் தட்டினை ஷிப்பிங் சார்ஜ் செலுத்திப் பெற்றுக் கொள்வதும், தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடை வழங்குவதும் இரு வேறு செயல்கள். நீங்கள் நன்கொடை ஏதும் அளிக்காமலும் இசைஞானியின் இந்த ஒலித்தட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம். அதையும் ஒரு இளையராஜாவின் ரசிகனாக மிஷ்கினின் பெருந்தன்மை அனுமதிக்கிறது.

மீண்டும் ஒரு முறை நண்பர் மிஷ்கினுக்கும், ராஜாவின் இரசிகர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்கொடை அளிக்கவிருக்கும் உங்களுக்கும் எனது நன்றிகள் பல.


அந்த தொண்டு நிறுவனத்தின் வங்கி விவரம் உங்களின் கவனத்திற்கு: www.vasantham.org
Account Name: VASANTHAM
Account No.: 29780100001270
Bank Name: Bank of Baroda
Branch: Mogappair, Chennai
Address of bank: PC-2/6, Block 2, Kambar Salai, Mogappair West, Chennai 600 037
IFSC Code: BARB0MOGAPP
Phone: +91-44-23454218 / 23245244
Email: mogapp@bankofbaroda.com





Reply · Report Post