maya_twit

Sridhar · @maya_twit

30th Aug 2013 from TwitLonger

ராஜா என்ற ராஜா மட்டும் தான் - ஆர்.டி பர்மனுடன் பொருத்துவது சுவாரஸ்ய கிளிசே -அதை தொடர்ந்த என் கருத்க்க்கள் ரசனையின் பதிவில்

http://kushionline.blogspot.in/2013/08/blog-post_26.html?showComment=1377882925108#c260334187715586787

--------------------------------------------------------------------------------
ராஜாவின் இசை பற்றி சொன்னதில் எனக்கும் முழு உடன்பாடு உண்டு தான். ராஜா பாடிய பாடல்களில் தான் என் முன்னிரிமையும் இருக்கும்.

நிற்க, உங்கள் பதிவை இணைப்பாக ட்விட்டரில் கொடுத்து ஆர் .டி.பர்மனுடன் ராஜாவை பொருத்தி பார்ப்பது நியாயமற்றது என்று ஒரு ட்வீட்டும் ,அதற்கு முன்னர் "ஒவ்வொரு முறையும் ராஜா பாட்டு வரும்போது எவனாவது கிளம்பறான் -ராஜா திரும்ப வந்திட்டாருன்னு-நல்லா இருங்கடே" என்று நகைச்சுவையாக ஒரு ட்வீட்டும் போட்டேன். அது உங்களை வாசிப்பவர்களின் மூலமும் உங்களை தொடர்பவர்களின் மூலமும் உங்களிடம் வந்தடைந்து அது பற்றி நிறைய வேடிக்கையாக விவாதித்ததாக நானும் அறிந்தேன், ஆனால் எதையும் தேடி படிக்கவில்லை, நம்புங்கள் உண்மை தான்.

இந்த பதிவின் முக்கியப் பிரச்சினையாக நான் கருதுவது பஞ்சம் தாவிற்கும் ராஜாவுக்குமான இணைப்பை.அதில் ஒரு நியாய இழப்பு இருப்பதாக கருதுவதால் அது பற்றி கொஞ்சம் முடிந்தவரை விவாதிக்கலாம். உடனே இந்த ராஜ ரசிகர்களே இப்படிதான்னு கிளம்பி வர மாட்டேங்கன்னு நினைக்கிறேன் எசமான்.

அடிப்படையாக இதை ஆர் டி பர்மனுக்கான தனிப் பதிவாகவும் ராஜாவுக்குமான தனிப்பதிவாகவும் இருந்திருந்தால் இரண்டையுமே ஏற்றுக் கொள்ளும் மன நிலைதான் எனக்கு. பஞ்சம்தா பீல்ட் அவுட் என்பதும் பத்து வருடங்களுக்கு பிறகும் எத்தனை படம் இசை அமைத்தார் என்பதும் என் அளவில் தெளிவில்லை. அவர் அந்த கால கட்டங்களில் இசை அமைத்திருந்தாலும் கூட, வெற்றிப் படங்களில் அவர் செய்திருந்த இசைக்கு எந்தக் குறையும் இருந்திருக்காது, ஆனால் இதை தெளிவாக ஆராயும் மன நிலையும்,அவரது அந்திமக் கால படங்களின் பாடல்களையும் கேட்காமல் தான் இப்போது எழுதுகிறேன்.
சமகாலத்தில் இரு வேறு சினிமா உலகத்தில் வணிக ரீதியாகவும் வெற்றியடைந்த இரு பெரும் மேதைகள்( ராஜாவுடன் நிகராக இல்லாமல் என்னிடம் தனியாக பஞ்சம் தாவிற்கென்று இடமுண்டு) என்ற இடத்துடன் இருவருக்குமான ஒற்றுமைகள் காலாவதியாகி விடுகிறது. அவரது வணிக வெற்றிக்குப் பின் அவரிடம் திரைப்படங்கள் இல்லாததும் பிறகு வெற்றி பெற்ற 1942 லவ் ஸ்டோரி ரிலீசுக்கு முன்னர் அவர் இறந்ததும் வருந்தத்தக்க விஷயம்.
ராஜாவுக்கு பத்து அல்லது கொஞ்சம் கூடுதலான வருடங்களில் அவரது வணிக வெற்றி என்பதுடன் அவரது இசை உலகம் காலாவதியாகி விடவில்லை. எண்பதுகளில் வளர்ந்த தலை முறை பிறகு வளர்ந்து ராஜா மீது மிகுந்த அபிமானம் கொண்டவர்கள் அவருடன் சேர்ந்து பணியாற்றிய படங்கள் எண்ணிக்கை மட்டுமே கூட, அவரது வீழ்ச்சி என்று சொல்லப்பட்ட தொண்ணூறுகளின் பின் பகுதியில் இருந்து இசை அமைத்த எந்த முன்னணி இசை அமைப்பாளரின் படங்களின் எண்ணிக்கையை விடவும் மிக அதிகமாக இருக்கும். படங்களின் எண்ணிக்கை மட்டுமே ஒருவரின் இருப்பை நியாயப்படுத்த முடியாது என்பதையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் வணிக வெற்றி அடைந்ததா என்ற கேள்வி எல்லாம் தேவை இல்லாதது. வணிக ரீதியில் மிகப்பெரிய இடத்தில இருந்த காலம் தொட்டே ராஜா எல்லா விதமான பட்ஜெட் படங்களுக்கும் இசை அமைத்தே வந்திருக்கிறார். அது இன்னும் தொடர்கிறது. தொண்ணூறுகளுக்குப் பின் அவர் பணியாற்றிய திரைப்படங்கள் பெரும் தோல்விகளை இன்று வரை சந்தித்துக் கொண்டே வந்திருக்கிறது.ஆனால் அவரது இசை அமைப்பில் பல பரிமாணங்களையும் புதிய வகை இசை அமைப்புகளையும் பரிசோதித்துக் கொண்டே வந்திருக்கிறார் எல்லா மொழிகளிலும்.

மேகாவில் திரும்ப வந்திருக்கிறார் என்று சொல்வதன் மூலம் தொண்ணூறுகளுக்குப் பின்னரான இருபது வருட உழைப்பு தவறாக மதிப்பிடப் பட்டிருக்கிறது.திரை இசையின் உச்சமான ஹேராம் (என் அனுமானத்தில்) வந்திருக்கிறது -இன்னும் பல படங்களை பட்டியலிட முடிந்தாலும் எனக்கு அதில் விருப்பமில்லை. மலையாளத்தில் எண்ணற்ற திரைப்படங்கள் செய்திருக்கிறார். பழசிராஜாவின் எந்தப்பாடலும் அவரது எண்பதுகளின் பாடலுக்கு குறைவும் இல்லை அதிகமும் இல்லை. ஆந்திராவிலும் கர்நாடகாவிலும் இன்னும் வித்யாசமான இசையை அவர்களுடைய மண்ணுக்கேற்ற ஆனால் மிகவும் நவீன இசையாக உருவெடுக்கிறது . தமிழ்நாட்டு இளம் படைப்பாளிகளில் முக்கியமானவர்கள் கூட இன்னும் ராஜாவுடன் சேர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் "டொக்காயிட்டாரு" போன்ற ஆகக் கேவலமான வார்த்தைகளை மேதைகளின் மேல் வீசிவிட தமிழர்களுக்கு மட்டும் தான் தைரியமிருக்கிறது என்று பெருமை பட்டுக் கொள்ள வேண்டும் போல.

கடந்த சில மாதங்களில் நீதானே என் பொன் வசந்தம், நிலாச்சோறு, நாடி துடிக்குதடி மற்றும் மேகா வந்திருக்கிறது, இந்த நான்கிலும் மேகாவும் NEPV யும் ஒரே வண்ணத்தில் வரையப்பட்ட இரு வேறு இசை ஓவியங்கள். நிலாச்சோறுக்கு தேவையான எளிமையான இசை வடிவத்திலும் நாடி துடிக்குதடிக்கு முற்றிலும் வேறு விதத்திலும் இசை அமைக்க, முப்பத்தைந்து வருடம் இசை செய்த பிறகும் கூட முடிகிறது. படத்தின் வடிவத்தை இசை ரீதியாக கட்டமைக்கதானே எல்லா இளம் இசை அமைப்பாளர்களும் முயற்சிக்கிறார்கள்? அது ராஜாவிடமிருந்து எந்த வித தயக்கமும் இல்லாமல் ஆதார முத்திரையுடன் இன்னும் இன்னும் வேறு வடிவத்தில் வந்து கொண்டிருக்கிறதே, அவர் எங்கேயாவது காணமல் போய் இருந்தால் தானே தேடிக் கண்டு பிடிக்க?

தாண்டவக்கோனே என்றே திரைப்படமும் மேற்சொன்னது போன்ற சிறிய பட்ஜெட் தோல்விப் படம் தான், காட்டு வழி துன்பம் மற்றும் நீரால் உடல் கழுவி பாட்டும் சொல்ல வருவதென்ன? அது எப்படி இசையால் சாத்தியம் என்றால், இசை வருபனுக்குதானே சாத்தியமாக முடியும்? ட்விட்டரில் ஒரு கூட்டம் வால்மீகியை பயங்கர நகைச்சுவை போன்று எதையோ செய்து கொண்டிருந்தார்கள், அதில் ராஜா பாடிய அச்சடிச்ச காசை பாட்டை நானும் முதல் முறை கேட்டு அந்தப் பாடலின் பக்கமே போகாமல் கொஞ்ச நாள் இருந்தேன்.கொஞ்ச நாட்களுக்குப் பிறகு ஒரு அமைதியான மாலையில் கேட்டால் மெல்ல மெல்ல விடுபடும் புதிரைப் போல, ராஜா ஒளித்து வைத்திருக்கும் மாயங்கள் புரிபட ஆரம்பிக்கிறது.ஆனால் இது போன்ற சில பாடல்களில் அதை கண்டடைய கொஞ்சம் முறை ராஜாவின் சூத்திரத்திற்கு நம்மைக் கொடுக்க வேண்டும். அது கட்டாயம் கூட இல்லை, ராஜாவின் ரசிகனாக இருப்பதால் எனக்கு அது தேவையாகவும் இருக்கிறது. பிறகு தான் புரிகிறது, ராஜா இதனை வருஷம் செய்த பாடல்களில் எது மாதிரியாகவும் இல்லாத புது மாதிரியான பாடல் வகை. நீங்களே சொன்னது போல் உங்களுக்கு கள்வனே பாடலின் இசை குறும்புகள் பிடிக்க கொஞ்ச நாள் ஆகலாம். ஆனால் அது வரைக்கும் நீங்கள் NEPV க்கு கொடுத்த இரண்டு மதிப்பெண்கள் என்பது போன்ற அசம்பாவிதங்கள் செய்யாமல் இருத்தல் நலம்.

ராஜா என்ற ஆர்.டி.பர்மன் என்று இல்லாத ஒன்றை திறமையான எழுத்தின் மூலம் நீங்கள் கண்டடைய முயல்கிறீர்கள். ராஜா என்ற ராஜா மட்டுமே என்பது தான் என்னுடைய விவாத உள்ளடக்கம்.

Reply · Report Post