இது அவங்களுக்கு மட்டுமில்ல எல்லாருக்கும்தான்..

இரண்டு நாள நான் ட்விட்டருக்கு வர முடியல சில சொந்த பிரச்சினைகளால்ல..

இங்க வந்து பார்த்தா நான் எதோ பெரிய கொலைகாரன் மாதிரியும் எதோ காம கொடூரன் மாதிரியும் ஊரே வாய்க்கு வந்தத பேசிட்டிருக்கு.

பிரத்திபா அவங்க ட்விட்லாங்கர் பார்த்தேன் அதப்பத்தி மட்டும் நான் கொஞ்சம் பேசியே ஆகனும்..

பிரச்சினை என்னன ட்விட்டப் நடந்த முந்தைய நாள் நைட்டு நான் பிரத்திபா அவங்கள பத்தி 4 பேர் மத்தியல பேசினதுதான்... என்ன பேசினோம்றது எனக்கும் அந்த 4 பேருக்கும்தான் தெரியும்...

உண்மைதான் ஒத்துக்கிறேன்
ஒரு பெண்ண விமர்சிக்கவோ அவங்கள பத்தி கண்டத பேசவோ யாருக்கும் உரிமை கிடையாது... இதுக்காக அவங்கள்ட்ட பகிரங்கமா நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்.

ஆனா அவங்க 'நான் அவங்கள பாத்தேன்டா, ஓ***ன்டா' அப்டினுலாம் நான் பேசினதாகவும் சொல்லுறாங்க இப்பவும் சொல்றேன் நாங்க பேசினது எங்களுக்குதான் தெரியும்...அது விளையாட்டா ஆரம்பிச்ச ஒரு வினை. அதுல அந்த இரண்டாம் வார்த்தைலாம் இடம்பெற்றுச்சானுலாம் அந்த கடவுளுக்குத்தான் தெரியும்...
சும்மா எதுகை மோனையா என்ன வேணும்னாலும் பேசலாம் போல...

இதுல....பெண்தானே...அதெல்லாம் அவங்க
சொல்றதலாம் உண்மைமையாத்தான்
இருக்கும்னு என்ன பிரச்சினைனு தெரியாம சொம்படிக்க மிகப்பெரிய கூட்டம் வேற...

இப்பவும் சொல்றேன். அன்னைக்கு நைட்டு சுந்தர் ஆகிய நான் எனது ட்விட்டர்
ஐடிலயிருந்து அவங்களபத்தி எதாச்சு
தவறாகவோ கீழ்தரமாக எந்தவொரு ட்விட்டும் போடவும் இல்ல,போட்டுட்டு டெலிட்டவும் இல்ல... அப்படி எதாச்சும் ட்விட் இருந்தால் நீங்க தாராளமா ஸ்கிரீன்ஷாட் காட்டலாம்...
உடனே அவங்க எனக்கு மென்ஷனிட்டு ஆரம்பித்த
முதல் ட்விட் இப்படித்தான் 'u fucking
bastard......' அதுக்கப்பறம் அடுத்த
நான்கு ட்விட்டுகள் அம்மா,தங்கை என்
மனைவி என அற்புதமான வார்த்தைகளில் கீழ்தரமாக அணிவகுத்து... வந்த வேகத்தில்
அடுத்த சில நிமிடங்களில் டெலிட்டவும்பட்டது..
அது அன்றிரவு டைம்லைனில்
இருந்தவர்களுக்கு தெரிந்திருக்கக்கூடும்...

சரி அவங்க ஆத்திரம் தீர பழிக்குப்பழி வாங்கிட்டாங்கனு அவங்க கோவம் சரிதானு. அந்த ட்விட்டகளுக்கு நான் ரிப்லைகூட போடல..

இதுலாம் முடிஞ்சதுக்கப்பறம் நான் டைம்லைன்ல போட்ட ட்விட் 'என் தங்கைக்கு விபத்து இரத்தம் தேவை'னு சொல்லப்போனால், அது நண்பனின் தங்கையின் தோழி, இப்படி கேட்டாதான் ரெஸ்பான்ட் பண்ணுவாங்கனு பண்ணிணேன் சொன்னபடியே நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது என்னால 6 யூனிட்
பிளட்டும் ரெடி செஞ்சு தந்து அந்த
பொன்ன காப்பாத்த முடிஞ்சது.

கூட பிறக்கலைனாலும் அவங்களும் என் தங்கைதான்!
இந்த பிரச்சினைக்களுக்கு நடுவுலதான்
அவங்க போட்ட அப்படி ஒரு ட்வீட்
'ஒரு நாதாரியின் தங்கை............'
இப்படி ஒன்னு அத நான் ஸ்கிரீன்ஷான்லதான் பார்த்தேன்
அது தப்புனு அவுங்களே டெலிட்
பண்ணிட்டதாகவும்....
கேள்விப்பட்டேன்.

இதைப்பார்த்துட்டுதான் நிறைய நண்பர்கள் கோவத்துல வார்த்தைய விட்டுட்டதாகவும்.. தக்காளி பாய்ஸ் ஐடிலயிருந்து நிறைய
வசைபாடியதையும் பாத்தேன்.
அவங்க கேவலமான வார்த்தைகள
உபயோகித்தது தப்புதான் அதுக்காக அவங்க எல்லாரும் சார்பா நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்.

நான் இப்போ இவ்ளோ கதை சொல்லி நான்
யோக்கியனுங்க சொல்ல வரல...நான்
செஞ்சது தப்புதான் அதுக்கு இன்னொருமுறை மன்னிப்பு கேட்டுக்கிறேன்.

நைட்டு அவங்க திட்டியதும் அதையே மனசுல வச்சிருந்து அடுத்தநாள் வந்தும்
கண்டபடி திட்டியதற்கும் பதில்,
என் பிறந்தநாள் அன்னைக்கு போன் பண்ணி வாழ்த்து சொல்ல தெரிஞ்ச
அவங்க அன்னைக்கும் ஒரு போன்
பண்ணி அதைவிட இன்னும் 4 வார்த்தை சேர்த்து திட்டி என்னைய ப்ளாக் பண்ணிட்டு இதை முடிச்சிருக்கலாம்.

ஊருல போறவன் வர்றவன்லாம் டைம்பாஸ் பண்ணுறதுக்கு வழி செய்யாமலாவது இருந்திருக்கலாம். இவங்களே இதை ஊதி ஊதி இவ்ளோ பெருசாக்கி என்னை ஒரு காம கொடூரணாகவும் இங்கு பெண்களுக்கு பாதுகாப்பே இல்லனும் கொண்டு வந்து முடிச்சுட்டாங்க!

என்கூட பழகுனவங்களுக்கு என்னப்பத்தி தெரியும். இங்க எனக்காக பேசுனவங்களும்
அதனாலதான் .

இதுல உடனே இங்க கெளம்பிய ஒரு க்ரூப்பு இணையத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை... அது இல்லை இது இல்லைனு....
உடனே கிளம்பிய பெண்களை பாதுகாப்பதற்காக்கே அனுப்பபட்ட தேவதூதர்கள்....

ஷபாஆஆஆஆ...
அதை நினைச்சாத்தான்...என்­னனமோ வருது வாயில...

நான் இதுக்காக அவங்க்கிட்ட தனிப்பட்ட முறையில் மன்னிப்புக் கேட்டுக்கிறேன்,இதுக்கு மேல அவங்க என்ன எதிர்பார்க்கிறாங்களோ அதை நான் அவங்ககிட்ட பேசிக்கிறேன்.


இதோட ப்ளீஸ் நிறுத்திக்கீங்க. வேற எதாவது உருப்படியா வேலை இருந்தா பாருங்க ...
எனக்கு சப்போர்ட் பண்ணுறவங்களுக்கும்
சேர்த்துதான்......

மன்னிச்சுடுங்க.... dot

Reply · Report Post