tekvijay

??? ??????? · @tekvijay

18th Feb 2013 from Twitlonger

எனக்கும் விசிலடிக்கணும்னு ஆசை இல்லாம இல்ல. பாட்டுக்கு நடுவில விசிலடிக்கிறவன் காட்டுமிராண்டி. அஷ்டே. நோ மாற்றுக்கருத்து.

தலைவன் சொன்னா கேக்கணும்குறதுதான் எகழுதப்படாத விதி. கமல் சொன்னா கூட்டம் கேக்குது இல்லையா?! இவர் சொன்னா ஏன் கேக்கமாட்டேங்குது?!? ஏன் எங்களுக்கெல்லாம் ஒரு லைவ் நிகழ்ச்சில இருக்கும்போது ஒரு பாட்டை கேட்டோண்ணே அடக்கமுடியாத உற்சாகம் பீறிட்டு வர்ரதில்லையா?!?

லண்டன்லேர்ந்து அவ்ளோ செலவு செஞ்சு ஒரு இசைக்குழுவை கூட்டிட்டு வந்தா, அவங்க வாசிக்குறதுக்கு நடுவில, பாட்டை கண்டுபிடிச்சிட்டேன்னு பெரிய பருப்பு மாதிரி விசிலடிச்சா, அது மைக்கிலும் பதிவாகுது இல்லையா?!? அதை பிரித்தெடுக்க தொழில்நுட்பத்தாலும் கூட முடியாது இல்லையா?!? விசிலடிக்கிற உனக்கு மட்டும்தான் பாட்டு கண்டுபுடிக்க முடியுமா?

பாட்டு முடிஞ்சப்புறம் எல்லோரும் கைதட்டுறாங்க அப்ப விசிலடிச்சா எவன் கேக்கபோறான்?!? அதுதானே உலக வழக்கம்?!?

சினிமால எவ்ளோ வேணா விசிலடிச்சிக்கலாம். வசனம் காதுல விழலன்னா இன்னொருதபா பாத்துக்கலாம் ஆனா லைவ் ஷோவில?!? அப்போ அவன் காட்டுமிராண்டி தானே?!?

மேற்கத்திய WCM Concertகளில், இசை எவ்ளோ நல்லாருந்தாலும் அமைதியா தான் இருப்பாங்க. ஒவ்வொரு பாட்டும் முடிஞ்சப்புறம் 3 முறை விட்டுவிட்டு கைதட்டுவாங்க. அவங்க காட்டும் அதிகபட்ச சந்தோஷம் அதுதான். ஆனா அந்தளவு நாகரீகமா எல்லாம் இருக்கணும்னு சொல்ல வரலை. ஆனா பாட்டுக்கு நடுவில விசில் அடிச்சி அடுத்தவனுக்கு இடைஞல் குடுப்பது என்பது மைக்கேல்ஜாக்சன்/ப்ரிட்னி ஸ்பியர்ஸ் கச்சேரில கூட நடக்காது. வேணும்னா ஒருபாத்து முழுக்க விசில் அடிச்சிப்பாங்க. அந்த பாட்டை கொண்டாட்டத்துக்குன்னே டெடிகேட் பண்ணிடுவாங்க. ஆனா மத்த சமயத்தில் அமைதியா தான் இருப்பாங்க.

எப்படி பார்த்தாலும் நம்மாளு பண்றது அந்த மாதிரி ஒரு முழுக்க முழுக்க ஹை வோல்டேஜ் அட்ராசிட்டி கச்சேரி இல்லை. "பாட்டு இசைக்கும்போது அமைதியா இருந்து, ஆர்கெஸ்றேஷன் நுணுக்கங்கள், நான் செஞ்ச சின்னசின்ன விஷயங்கள், மாற்றங்களை அனுபவிச்சி ரசிங்க"ன்னு அவர் எதிர்பார்க்குறாரு. இதுல என்ன தப்பு சொல்ல முடியும்?!?

கமல் நாட்டைவிட்டு போய்டுவேன்னு சொன்னது மாதிரியான கோவம் தான், கச்சேரிய விட்டு எழுந்துபோய்டுவேன்னு சொன்னதும். அப்போ இவங்க ராஜாவை அவ்ளோதான் மதிக்கிறாங்களா?!?

Reply · Report Post