விஸ்வரூபம் 2 வாரம் தடை செய்யப்பட்ட முதல்நாள் புதிய தலைமுறையில் ஒரு முஸ்லிம் லீடர் “ஒரு காட்சி ரெண்டு காட்சின்னா வெட்டலாம், இது படம் முழுதும் இஸ்லாமிய விரோத காட்சிகள், படத்தையே தடை செய்யணும்”.

கொஞ்ச நாள் கழுித்து 24 இஸ்லாமிய அமைப்புகளின் வக்கீல் கோர்ட்டில் ”ஒரே ஒரு பாடல் தவிர மற்று அனைத்தும் இஸ்லாமிய விரோத காட்சிகள், எனவே...”.

பின்னர் தமிழக அரசு மேற்பார்வையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை(!) ஆரம்பிக்கும் முன் ”30 நிமிட காட்சிகள் வெட்ட வேண்டும்”.

முதல் நாள் பேச்சு வார்த்தையில் ”14 காட்சிகள் (20 நிமிடங்கள்?) வெட்ட வேண்டும்”.

இரண்டாவது நாள் கமல் கலந்த கொண்ட பேச்சு வார்த்தை முடிவில் ”7 காட்சிகள் வெட்ட இரு தரப்பும் ஒப்புக்கொண்டோம்”. இதே முடிவை கமல் ”ஒலிக்குறிப்பை நீக்க” (ஒளி?) என்கிறார்.

ஆக முழுப்படம் என்பதில் இருந்து வெகு சில இடங்கள் என்ற அளவிற்கு இறங்கி வந்திருக்கிறார்கள். இது எப்படி நடந்தது? அரசியல் ஒருபக்கம் இருக்கட்டும். வேறு விதமாகப் பார்த்தால், திடீரென்று படம் (90+%) இஸ்லாமிய விரோதமில்லாமல் ஆகிவிட்டதா? அப்படியென்றால் இவர்கள் புரிதல் அந்தளவிற்கு அபாரமானதா!? கமல் மற்றும் பலர் மற்றும் ஊடகங்கள் இதை விளக்கிச் சொல்ல, அப்புறமாவது இவர்களால் புரிய முடிகிறது என்று எடுத்துக் கொள்ளலாமா?

இல்லை இவர்களுக்கு சகிப்புத்தன்மை கூடிவிட்டதா?. கமல் மற்றும் பலர் மற்றும் ஊடகங்கள் இதை விளக்கிச் சொன்னதனால் கூடிவிட்டது என்று எடுத்துக் கொள்ளலாமா?

வீரத்தின் உச்சம் அகிம்சை என்று காந்தியின் பாதையை எடுக்கிறார் கமல். வெறும் உண்ணாவிரதம் மட்டும் காந்திய வழி அல்ல, எதிராளியின் இதயத்தில் ஊடுருவி அவனை அசைத்துப்பார்ப்பதே உண்மையான காந்தியம். அந்த வகையில் கமல் எதிராளிகளை தொட்டு சில காட்சிகள் (ஒலி?) நீக்கத்தோடு விவகாரத்தை முடித்துவிட்டார் என்றே கருதுகிறேன்.

கமல், 24 இஸ்லாமிய அமைப்புகள், த.அரசு என்று முத்தரப்பு கோதாவில் த.அரசின் பெயர் இந்திய அளவில் கெட்டுவிட்டது? 24 இஸ்லாமிய அமைப்புகளால் பொதுவில் இவர்கள் சகிப்புத்தன்மையற்ற மூர்க்கவாதிகள் என்று பெயர் வந்துவிட்டது, கமலின் உருவம் விஸ்வரூபம் எடுத்துவிட்டடது. எனவே வெற்றி கமலுக்கே!.

Reply · Report Post