#விஸ்வரூபம் உண்மை / #Vishwaroopam Truth

ஆளும் தரப்புக்கு நெருக்கமான ஊடகம் ஒன்றுதான் 'விஸ்வரூபம்’ படத்துக்கான சாட்டிலைட் உரிமையை முதலில் வாங்கியதாம். இரண்டு மூன்று இடங்களில் நடந்த இசை வெளியீட்டு விழாக்களையும் அவர்கள்தான் ஒளிபரப்பினர். டி.டி.ஹெச். முறைப்படி படத்தை வெளியிடக் கமல் ஆர்வமாக இருந்தது அந்த ஊடகத்துக்குப் பிடிக்கவில்லை. காரணம், தனக்குப் பிடிக்காத சில கம்பெனிகளும் இந்த உரிமையை வாங்கி இருப்பதே அவர்களது கோபத்துக்குக் காரணம். அதனால், சாட்டிலைட் உரிமையைத் திரும்பக் கொடுத்து, அட்வான்ஸ் பணத்தையும் திருப்பி வாங்கி விட்டார்களாம். இந்த நிலையில், இன்னொரு ஊடகத்திடம் கமல் பேசி இருக்கிறார். அவர்கள் வாங்கிக்கொண்டனர். இதுவே புதிய சர்ச்சைகளுக்குக் காரணம் ஆனதாம். சட்டம் - ஒழுங்கு உடனடிக் கார ணமாகக் காட்டப்படுவது இதற்காகத்தான் என்றும் சொல்லப்படுகிறது.''

- ஜூனியர் விகடன்

Reply · Report Post