@voice_on_wings

ரவி,

//நெஜமாவே காதலிச்சாங்களான்னு சந்தேகம் வருது. அப்பப்போ பிரிவதற்கான காரணங்களும் வலுவா இல்ல, பிறகு இணைவதற்கான காரணங்களும் வலுவா இல்ல. இனிமே கூட ஒரு மொக்கை காரணத்துக்காக பிரிந்து விடக்கூடியவங்களாதான் எனக்கு தென்படறாங்க, இரண்டு கேரக்டர்சும். //

நீங்க நம்பினாலும், நம்பாமப் போனாலும், நிஜக் காதல் இதை விட மரண மொக்கையா இருக்கும். சந்தேகமே வேணாம். சமந்தா போன்ற Consolation Factor கூட நிஜ வாழ்க்கையில் கிடையாது :) ( கிட்டதட்ட, ஒரு சினிமா சிபிஐ ஆபீசருக்கும், நிஜ சிபிஐ ஆபீசருக்கும் இடையிலான வித்தியாசம்.) அந்த ரியலிஸத்துக்காக மட்டுமே எனக்குப் பிடிச்சது. இந்த மாதிரி காரக்டர்களை பார்த்துப் பழகினவங்களுக்கு ரொம்ப ஈசியா படம் புரியும் / புடிக்கும் ங்ற அந்த Exclusiveness தான் படத்துகிட்ட இன்னும் ஈர்க்குது.

எனக்கு ஏன் பிடிச்சதுன்னா ( ஏற்கனவே வேற எடங்களிலே சொன்னதுதான்.. )சுருக்கமா..

1. நீண்டநாள் காதலிச்சுத் திருமணம் செஞ்ச நிறையப் பேரோட கதை கிட்டதட்ட இதே போலத்தான் இருக்கும்.
2. love at first sight காதலை, உணர்ச்சி பூர்வமான க்ளைமாஸுடன் பார்த்துப் பழகின நமக்கு, twist & turn இல்லாத கதை, செரிக்க கஷ்டமா இருக்கும். ரெண்டாவது ரீல்லயே போரடிக்கும்.
3. இந்தப் படம் பிடிக்காதவங்களுக்கு, இதிலேர்ந்து எடுத்துக்க ஒண்ணுமே இல்லை. ஆனா, பிடிச்சவங்களுக்கு இதை விட ஒஸ்தியான சரக்கு வேற ஏதும் இல்லை.
4. சமந்தா.
5. எங்க இருக்கணும். எங்க அமுக்கி வாசிக்கணும், எந்த இடத்துல சைலண்ட் ஆக இருக்கணும், எந்த இடத்துல , எந்த வசனத்தின் முடிவிலே, என்ன வார்த்தையுடன் பாடல் துவங்கணும் முடிவு செஞ்சு, அட்டகாசமா துணை நின்ற ராஜா.

மேனனோட முக்கியமான மிஸ்டேக், முதல் வார ஆடியன்ஸோட level of engagement ஐ கண்டுக்காம விட்டதுதான். While remaining brutally honest to the script and its characters, GVM made the movie inaccessible to the younger lot that expected a VTV 2 from him.


Reply · Report Post