@Koothaadi வணக்கம் நண்பா :)
பொதுவா அரசியல்வாதிகளுக்கு ஒரு பழக்கம் உண்டு, அவங்கமேல ஒரு குற்றச்சாட்ட சொன்னா உடனே அதுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு பதில சொல்லுவாங்க. இப்ப அந்தப் பழக்கம் சில டிவிட்டர்களுக்கும் வந்திடுச்சு! பெண்கள் ஆடை சுதந்திரம்கிற பேர்ல எல்லை மீறிய ஆடைய அணியவேண்டாம்னு சொன்னா, அடக்கமா ஆடை உடுத்தினாலும் கற்பழிப்பு நடக்கத் தானே செய்யுதுன்னு பதில் சொல்றாங்க, ஐயா சாமிகளா நானும் ஏத்துக்கிறேன், ஆடை சுதந்திரத்தினால தான் கற்பழிப்பு நடக்குதுன்கிறது ஒரு தப்பான வாதம் தான். கற்பழிப்புங்கிறது காமத்தோட எல்லை மீறிய மிருக நிலை, அந்த மாதிரி வெறி புடிச்சவணுக பெண்கள் எவ்வளவு அடக்கமா ஆடை உடுத்தினாலும் நாசம் பண்ணக்கூடியவங்க தான், மேலும் இது மாதிரியான மிருகங்களுக்கு கடுமையான தண்டனை குடுக்கத்தான் வேணும், அதுல மாற்று கருத்தே இல்ல. ஆனா இதுக்காக, ஒரு பெண் கன்னாபின்னான்னு துணி உடுத்தறது சரியில்லைன்னு சொல்லக்கூடாதா ? ஒடனே மறுபடி கற்பழிப்புங்கிற தலைப்புக்கு போகாதீங்க, தயவு செய்து ஆடை கட்டுப்பாட்ட வேறு ஒரு தனிப்பட்ட கருத்தா பாருங்க.

இப்பிடி கேள்விகேட்டா ஒடனே, “பெண்களின் ஆடை தேர்வு என்பது அவங்க தனிப்பட்ட சுதந்திரம், அத கேள்வி கேக்க உங்களுக்கு என்ன உரிமை”ன்னு பதிலுக்கு சிலர் கேக்குறாங்க.பெண்கள் எல்லை மீறுன ஆடைய உடுத்திக்கிட்டு வீட்டுக்குள்ளயேவா இருக்காங்க? இந்த சமூகத்துக்கு முன்னாடி தானே வர்றாங்க? இந்த சமூகத்துல தான் நாங்களும் இருக்கோம், நடக்கற விசயங்கள பாக்குறோம், அது சரியில்லைன்னு எங்களுக்கு தோனுறப்ப அதப் பத்தின எங்களோட கருத்த சொல்றோம், அது தப்பா? அப்பிடி அது தப்புன்னா அரசியல் பத்தி எதுவுமே தெரியாம அரசியல் நிகழ்வுகள பத்தி கருத்து சொல்றதும் தப்பு தான், பலகோடி பணம் போட்டு எடுக்குற சினிமாவ வெறும் நூறு ரூபாய குடுத்து பாத்துட்டு கன்னாபின்னான்னு விமர்சனம் பண்றதும் தப்புத்தானே !

பொதுவா நம்ம கண் முன்னாடி நடக்குற விசயத்தப் பத்தி கருத்து சொல்றதுங்கிறது ஒரு எதார்த்தமான விசயம், அப்பிடி சொல்ற கருத்து உங்களுக்கு தப்புன்னு தோணுனா அதுல உள்ள தப்ப சுட்டிக்காட்டி உங்க பக்கத்து நியாயத்த சொல்லணுமே தவிர அத விட்டுட்டு நீ எப்படி அதப்பத்தி பேசலாம் அதுக்கு உனக்கு உரிமையே இல்லைன்னு சொல்றது அராஜகமே!

இன்னொரு ஹைதர் அலி காலத்து வசனம் வச்சிருக்காங்க, “பெண்களோட ஆடைல இல்ல குறை அதை பார்க்கும் ஆண்கள் கண்ணில் தான் இருக்கிறது குறை”ன்னு, இந்த வசனத்த ஆட்டோல எழுதிப்போடும் நாளை ஆவலோடு நான் எதிர்பார்கிறேன்! இத ஒரு வாய்ப்பா எடுத்துக்கிட்டு பெண்களுக்கு ஒரு விசயத்த சொல்ல விரும்புறேன், நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் ஆண்களோட கண்கள் காமப்பார்வைன்கிற குறை அதிகம் உள்ள கண்களே, இது ஒரு அசிங்கமான குணம்தான், சந்தேகமே இல்ல, ஆனா இந்தக் குணத்த தவிர்க்கமுடியாம தின்டாடும் ஆண்களே அதிகம், ரொம்ப கம்மியான சதவிகித ஆண்களே இந்த கேவலமான குணத்த பெருமையா நினைப்பாங்க, மீதிப் பேரு இந்த மாதிரி சிந்தனைய விரும்பவம் செய்யாம விட்டொழிக்கவும் முடியாம தவிக்கிறாங்கங்கிறது தான் உண்மை. ஆனா இந்த மாதிரி அசிங்கமான குணம் ஆண்களுக்கு இருக்குங்கிறது நிச்சயமா பெண்களுக்கு தெரியும்னு நான் நம்புறேன்! பெண்களுக்குள்ள சிறப்பு குணம் அது! ஆனா அப்பிடி தெரிஞ்சும், பெண்கள் ஆடைக்குறைப்ப செய்யறது... ஆணோட மோசமான பார்வைய அங்கீகரிக்கிறது மற்றும் தூண்டுவது மாதிரியான செயல்தானே? இது ஒரு தப்பான தூண்டுதல்ன்னு நெனைக்கிறேன்.

நான் ஏன் பெண்களுக்கு ஆடைகட்டுப்பாடு வேணும்னு நெனைக்கிறேன்? அதுக்கான காரணத்த கீழ எழுதுறேன் …

1. ஆடை சுதந்திரம்கிற பேர்ல ஒரு ஆண் ஆடைகுறைப்பு செய்வது கிடையாது, அப்பறம் ஏன் பெண் மட்டும் செய்யணும்? உதாரணமா, ஒருபொது எடத்துல ஒரு ஆண் உள்ள போடுற பனியன் மட்டும் போட்டுக்கிட்டு வந்தா, அதப்பாக்குற நாலு பெண்கள் அதப்பத்தி கிண்டலாவோ இல்ல எரிச்சலாவோ விமர்சனம் பண்ணுவாங்களா, மாட்டாங்களா? என்வரை பெண்கள் நிச்சயம் கேலி பண்ணுவாங்க, அப்பிடின்னா அதே வேலைய ஒரு பெண் செஞ்சாலும் அதே விளைவுதானே கிடைக்கும் !

2. ஒரு குடும்ப உறுப்பினரா, என் வீட்டுப்பெண்கள் ஆடை குறைப்பு செய்யறத நான் வேண்டாம்னுதான் சொல்வேன் (ஆனா முடிவு என்னவோ அந்தப் பெண்ணோடதுதான் ) ஏன்னாஅப்பிடிப்பட்ட ஆடையோட வெளில போனா, ஆண் சமூகம் மட்டுமில்ல பெண் சமூகமும் தப்பா பாக்கும்னு இந்த சமூகத்துல இவ்ளோ நாளா வாழ்ந்ததுல புரிஞ்சிகிட்டு இருக்கேன் , (ஒடனே இது பழமைவாதம், பழையசாதம்னு ஆரம்பிக்காதீங்க, இதுதான் உண்மையான நிலவரம்கிறத புரிஞ்சிகங்க ) அப்பிடி இருக்கிறப்போ அடுத்த வீட்டு பெண்களுக்கு மட்டும் ஆடை சுதந்திரம் சரின்னு நான் சொல்றது எப்பிடி நியாயம் ஆகும் ?


3. நான் சந்திச்ச பெண்கள்ல ஆடை சுதந்திரம் பேசுன பலபெண்கள் (எல்லாப் பெண்களும் இல்ல ) அவங்களோட ஆடை விசயத்துல ரொம்ப கவனமாத்தான் இருந்திருக்காங்க, அவங்க உடுத்துற நவீன ஆடைகள்ள கூட உடல் தெரியிற மாதிரியான விசயங்கள் இருந்ததில்ல! இது மூலமா நான் புரிஞ்சிக்கிறது என்னன்னா பல பெண்களுக்கு ஆடை சுதந்திரம் வெறும் பேச்சளவுல தான், கூடவே அதப் பத்தி பேசுறதுன்கிறது ஒரு கவுரவம், பெரும, மேலும் ஒரு பெண்ணிற்கான கடமைன்கிற அளவுக்குக்கான புரிதல் மட்டும்தான்.

4. ஆடைசுதந்திரம்கிற பேர்ல ஆடை குறைப்பு சரின்னு சொல்றீங்களே, இந்த மாதிரியான ஆடையோட ஒரு ஆசிரியையோ, மருத்துவரையோ, செய்தி வாசிப்பவரையோ,அரசு ஊழியரையோ மனப்பூர்வமா ஏத்துக்குவீங்களா? ஏன் பன்னாட்டு நிறுவனங்கள்ளயே ஆடைகட்டுப்பாடு உண்டு தானே, அங்க வெள்ளிகிழமைகள்ள உடுத்துவதர்க்கான ஆடைகள்ள கூட கட்டுப்பாடு இருக்குதே? காரணமே இல்லாமையா வேலை செய்யும் இடங்கள்ள உடைகட்டுப்பாட கொண்டுவந்தாங்க?

5. பொதுவா பெண்கள் இந்த ஆடை குறைப்புக்கு சொல்லும் ரெண்டு காரணங்கள், 1. வசதி 2. தன்னம்பிக்கை .

மொதல்ல இந்த வசதிங்கிறது எவ்வளவு தூரம் நியாயம்னு பாப்போம், இப்போதைய காலகட்டத்துல பெண்களோட ஆடைய (உடலை வெளிப்படுத்தாத) விட ஆண்களோட ஆடைல வசதி குறைவு அதிகம். ஆண்கள் டக்-இன் பண்ணனும், ஷூ சாக்ஸ் போடனும், சமயங்கள்ல டை கட்டனும், மொத்ததில பெண்களோட உடைய ஒப்பிடும் போது அதிக சிரமங்கள் உள்ளது, இருந்தும் ஆண்கள் ஆடைகுறைப்புங்கிற விசயத்த கையில எடுக்கலயே, இத விட வசதியான உடை உடுத்தும் பெண்கள் மட்டும் ஏன் அத செய்யணும் ?

அடுத்து தன்னம்பிக்கை, ஆடை குறைப்பு செஞ்சு ஆண்கள தடுமாற விட்டு தான் உங்களோட தன்னம்பிக்கைய வளக்கனுமா ? (மறுபடி, ஆண்கள் நீங்க ஏன் தடுமாறுறீங்கன்னு கேட்டீங்கன்னா, இந்த கட்டுரைல உள்ள நாலாம் பத்திய படிங்கன்னு கேட்டுக்கிறேன்)

பெண்களோட ஆடை குறைப்ப ஆண் வரவேற்ப்பதோட காரணம் எனக்கு தெரியும் !! ஆனா பெண்கள் இந்த ஆடை குறைப்ப வரவேற்ப்பதோட காரணம் என்னவா இருக்கும்? அதோட காரணம் என்னன்னா, இது மாதிரி ஆடை குறைப்பு செய்து அடுத்தவங்கள ஈர்க்கிறது தான், குறிப்பா ஆண்களை. இது மாதிரியான நடவடிக்கை பெண்களை உயர்த்தாது மாறாக மட்டம் தட்டும், அதாவது என்னைப்பாரு என் அழகைபாருன்னு பெண் என்னவோ ஆணோட பொழுதுபோக்கு மாதிரியும் ஆணுக்காக மட்டுமே படைக்கப்பட்டது மாதிரியும் உருவகப்படுத்திடும். பெண்களோட இந்த மனநிலைய பத்தி உளவியல் மருத்துவர் சாலினி நீயா நானா நிகழ்ச்சியில தெளிவா சொல்லி இருக்காங்க (அதுக்கான சுட்டிய தேடிப்பாத்தேன் கெடைக்கல ) கொஞ்சம் நேரம் செலவு பண்ணி யூடியூபுல தேடிப்பாருங்க.

ஒரு விசயத்த புரிஞ்சுக்குங்க, ஒரு ஆண் ஒரு பெண்ண உடல் ரீதியான பாலியல் பலாத்காரம் செய்யறதுங்கிறது அந்த ஆண் உடல் மற்றும் மன ரீதியில வெறிப்புடிக்கிம்போது தான் நடக்கும். அந்த மாதிரியான ஆண்கள் ரொம்ப குறைவு தான். ஆனா ஒரு ஆண் ஒரு பொண்ண மனதளவுல பாலியல் ரீதியான நினைவுக்குள் கொண்டுவருவது, மனசளவில் சீண்டவதுங்கிறது ரொம்ப ரொம்ப சாதாரணமானது இது மாதிரியான ஆண்கள் பெரும்பான்மை அளவுல இருப்பாங்க, இந்த மாதிரி ஆண்கள் ஒரு பெண்ண தப்பா நினைக்கிறதுக்கு ஒரு காரணத்த தேடுவாங்க, அந்தக் காரணம் பெண்களோட உடையா இருந்திடக்கூடாதேங்கிறது தான் இங்க கவலையே. இதுக்கு மேல சொல்றதுக்கு ஒண்ணுமே இல்ல.

இந்தக் கட்டுரைய பாத்துட்டு, நான் பெண்கள மட்டமா நெனைக்கிறவன், பெண்ணின விரோதிங்கிற ரேஞ்சுல மென்சன் போடாம திட்டாதீங்க, அப்பிடி உங்களுக்கு திட்டணும்னு தோணிச்சின்னா தாராளமா மென்சன் போட்டு திட்டலாம், சாணிய கரைச்சு வேணும்னாலும் ஊத்தலாம். நான் அதப் புன்னகையோட ஏத்துக்குவேன் !! :)

நன்றி, வணக்கம் .
கணேஷ் -வசந்த்


Reply · Report Post