நீ தானே என் பொன் வசந்தம் = அரைத்த மாவு!
அய்யயோ! இத படிச்சா படம் பார்க்க சுவாரஸ்யம் இல்லாம போயிருமேனு நினைக்கிற அளவுக்கு படத்துல ஒரு சுவாரஸ்யமும் இல்ல!
கெளதம்மேனனுக்காகவும், இசைஞானிக்காகவும் பார்க்க தூண்டிய படம்! படத்தில் இவங்க ரெண்டு பேரும் இருக்காங்களான்னு டவுட் வருது படம் பார்க்கும் போது! படத்தில கதைனு ஒரு யழவும் இல்ல! காலங்காலமா காட்டுற ஈகோ புடிச்ச காதல் கதை! கெளதம் எதுக்கு இதே கருமாந்திரம் காதல் கதைக்குள்ளயே குதிரை ஓட்டுறாருனு தெரில! காக்கி சட்டை கதை தான் உங்களுக்கு கரீக்ட்! இன்னொரு விண்ணைத் தாண்டி வருவாயா மாதிரியான படம்! ஆனா கம்பேர் பண்ணுனா விதாவ பெட்டர்

படத்துல வழக்கம் போல ஆங்காங்கே பல இங்கிலீஸ் டயலாக்குகள் பேசுறாங்கே! ஏன் சந்தானமே இங்கிலீஸ்ல பேசி காமெடி(!) பண்றாருனா பார்த்துகங்களேன்

படத்துல பல இடங்களில் லிப் டூ லிப் கிஸ் காட்சி இருக்கு! ஆனா ஒரு கிஸ்ஸ கூட நேரடியா காட்டல!  இதுக்கு பாரதிராஜா மாதிரி பூவையும் பூவையும் ஒரச விட்டுருக்கலாம் கெளதம் சார்!\

பாடல்கள பத்தி ஏற்கனவே பல விமர்சனம் பார்த்தாச்சு! அதனால அதிகம் சொல்ல போறதில்ல! எல்லாப் படத்துலயும் பாட்டு வரும் போது தான் வெளிய போய் தம் அடிப்பாங்கே! படத்துல பாட்டு தான் ஒரளவுக்கு நம்மள சாந்த படுத்துது!
அதுவும் படத்துல எந்த பாட்டுமே முழு பாட்டு இல்ல எல்லாமே பிட் சாங்ஸ்! பாடல்கள் ஸ்கீரின்லயாவது நல்லாருக்கும்னு பார்த்தா ம்ஹீம் அதே ஓகே ரகம் தான்! பேக் கிரவுண்ட் மியுசிக் சொல்றதுகில்ல! ஒகே ரகம் தான்! ஆனா பழைய ராஜா சார் எந்த சீனிலும் காண கிடைக்கல!
படத்துல சமந்தா ஒரு சீன்ல “ஒரு மயிறும் இல்ல”னு சொல்வாங்க! படம் முடிஞ்சு வர்றப்ப அந்த டயலாக் தோணுது நமக்கு! படத்துல……!
கெளதம் சார் , ராஜா சார்…. .. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!

டிஸ்கி: படம் பார்க்கனும்னா காதலி இல்ல கேர்ள் பிரண்டோட போங்க! நிறைய சீன்ஸ் போரடிக்கும் அவங்க பக்கத்துல இருந்தா குஜாலா படம் பார்க்கலாம்(!)


Reply · Report Post