tekvijay

??? ??????? · @tekvijay

12th Dec 2012 from Twitlonger


கமலின் DTH எதிர்க்கும் சிறுபடதயாரிப்பாளார்கள் தியேட்டர் அசோசியேஷன் கேபிள்டிவி ஓனர்கள் எல்லாருமே DTH தங்கள் எதிர்காலத்தை அழிக்குமென்ற பயம் தெரிகிறது.

ஆனால் நீங்கள் மற்ற கலை/ஊடக வடிவங்களை அழித்தபோது மற்றவர்கள் போடாத தடையை இப்போது ஒரு தயாரிப்பாளர் புதிய வருமான வழியை பண்டுபிடிக்கும்போதுமட்டும் போட்டு குறுக்கே நிற்பது எந்தவிதத்தில் நியாயம்?? திருட்டுவிசிடி உங்கள் தியேட்டரிலேயே படம்பிடிக்க அனுமதித்து, புதுப்படத்தை கேபிளில் போட்டது என உங்கள் தொழிலுக்கு நீங்களே ஆப்பு வைத்தது, இவைபோக திரையரங்கு உரிமையாளர்களும் கேபிள் டிவி ஓனர்களும் திருட்டு விசிடியை ஒழிக்கவும் திரைத்துறை செழிக்கவும் என்ன முயற்சி எடுத்தீர்கள்??

சிறு தயாரிப்பாளார்களே, கமலுக்கு டிடிஹெச் கம்பெனிகள் தருவதுபோலவே உங்களுக்கும் ஒரு நியாயமான, உங்கள் படத்திற்கு ஏற்ற விலையை டிடிஹெச் கம்பெனிகள் கொடுக்கத்தயார் என்றால் கமலின் முடிவுக்கு ஆதரவு தருவோம் என்கிறீர்களே, நியாயமான விலை தரும் அளாவுக்கு எந்த கலைப்படைப்பை நீங்கள் தந்துள்ளீர்கள்? அப்படியே இருந்தாலும் கமல் எதற்கு உங்களுக்காக டிடிஹெச் கம்பெனிகளிடம் பேசவேண்டும்??

திரையரங்கு உரிமையாளர்களே, கோவை திருச்சி உள்ளிட்ட பல மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் கமலின் டிடிஹெச் முடிவுக்கு ஆதரவு என்றும் குறுக்கே நிற்கப்போவதில்லை என்றும் அதை உறுதிப்படுத்தி ரிசொல்யூஷனே பாஸ் செய்தபிறகும், அபிராமி ராமநாதன், கே.ராஜன்(இவர் யார், உருப்படியாக எந்த படம் எடுத்தார்??) இவர்கள் பேச்சை கேட்டுக்கொண்டு சென்னை மற்றும் பிற மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் நீங்கள் மட்டும் தனித்து போராடுவது ஏன்? ஒட்டுமொத்த திரையரங்கு உரிமையாளர்கள் உங்களிலேயே பலரும் உங்களுடன் சேராமல் கமலை ஆதரிப்பது ஏன் என உணரிந்தீர்களா??

டிடிஹெச் இல் படம் போட்டால், விற்ற விலைக்கு மூன்றுவிதமான வரிகளை அரசாங்கத்திற்கு கட்டவேண்டும் என சுட்டிக்காட்டும் கே.ராஜன் அவர்களே, முதலில் உங்கள் படங்களுக்கு நீங்கள் வரி கட்டியதுண்டா?? அதுமட்டுமல்ல, சினிமா துரையில் நேர்மையாக வரி கட்டுபவர் என வருமானவரித்துரையே கமலை பாராட்டி, அவர்கள் துறை சார்ந்த விழாக்களுக்கு கமலை அழைப்பது, வரி கட்டுவது தொடர்பான பொது விழிப்புணர்வு விளம்பரத்தில் கமலை நடிக்கவைப்பது என கௌரவப்படுத்தி வருகிறார்கள். அப்படிப்பட்ட அவரின் படத்துக்கு வரிகட்டுவது குறித்து ஆலோசனை சொல்ல உங்களுக்கு ஏது அருகதை??

கமல் இந்தப்படத்தை வினியோகஸ்தர்களிடம் விற்கவில்லை. அவரே தமிழகத்தின் திரையரங்குகளை வாடகை எடுத்து நேரடியாக ரிலீஸ் செய்கிறார். எனவே ஓபனிங்கில் டிக்கெட் விலையை கண்டபடி ஏற்றி கொள்ளை அடித்து, அந்தப்பணத்துக்கு வரி கட்டாமல் பதுக்கி ஏமாற்றுவது சற்று கடினம்,. எனவேதான் டிடிஹெச்சை எதிர்க்கிறேன் பேர்வழி என கமலுக்கு குடைச்சல் தருகிரீர்களா?!?

அதுபோக, அபிராமி ராமநாதன் 'யாருக்கு' நெருக்கமானவர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்! டிடிஹெச்சில் விஸ்வரூபம் உள்பட எந்தப்படமுமே ரிலீஸ் ஆகக்கூடாது, தியேட்டர்களுக்கு நிகராக/மாற்றாக படங்களை சுடச்சுட ரிலீஸ் செய்ய இன்னொரு ஊடக வடிவம் வந்துவிடக்கூடாதென மல்லுக்கட்டும் கே.ராஜன் எதற்கு கமல் டிடிஹெச் விற்பனைக்கு வரி கட்டுவாரா, யூ/ஏ படத்தை டிடிஹெச்சில் காட்டலாமா என்றெல்லாம் அவருக்கே பாய்ண்ட் எடுத்துக்கொடுக்கிறீர்கள்?!? அதற்கு நன்றிசொல்ல கடமைப்பட்டுள்ளோம் என்பது வேறு விஷயம்!

தமிழக திரை வறலாற்றில் முதல்முறையாக, ஒரு பெரிய பட்ஜெட், பரந்த வெளியீடு(wide release) படத்தை, அதனை தயாரித்தவரே, டிடிஹெச்சில் வருமானம் வருகிறது என்கிற ஒரே காரணத்துக்காக, மினிமம் கேரண்டி வாங்காமல் தியேட்டர் வாடகை முறையில் படத்தை வெளியிடுவது எந்பது எவ்வளவு பெரிய ரிஸ்க்? டிடிஹெச்சில் விஸவூபம் வரட்டும் வராமல் போகட்டும். ஆனால் இப்படி ஒரு முடிவை எடுக்க ஒரு தயாரிப்பாளராக கமல் முன்வந்ததற்கு அவர் எவ்வளவு தைரியம் கொண்டவராக இருக்கவேண்டும்?? கமலை ஆதரித்து பேசும் தயாரிப்பாளர் கே.ஆர் கூட, இதை புதிய முயற்சி என்பதை விட கமல் எடுக்கும் ரிஸ்க், தியாகம் என்று சொல்வதே சரி என்கிறார். அதுமட்டுமின்றி அபூர்வ சகோதரர்கள் படத்தை வெளிநாட்டு FMS Rights என்று பாகுபாடு படுத்தி தனித்தனியே விற்று அவரும் பெரும் லாபம் சம்பாதித்து, சிங்கப்பூர் மலேசியாவில் மூடப்பட்டிருந்த திரையரங்குகளை திறக்கவைத்து சாதநை படைத்தார் கமல், என்கிற அரிய தகவலையும் சொன்னார் தயாரிப்பாளர் கேயார். இதுபோன்ற செய்திகளை வெளியிட்டு கமல், திரைத்துறையில் செய்த புதிய முயற்சிகளை பராட்டத்தான் தமிழ் ஊடகங்களுக்கு மனமில்லை. ஆனால் இந்த டிடிஹெச் சம்பவத்தில், கமலுக்கு ஒரு சிறு தார்மீக ரீதியான ஆதரவு கூட தருவதாக எந்த பெரிய ஊடகமும் பேசவில்லை. கமலின் தனிப்பட்ட வாழ்க்கையை மட்டும் எந்தளவு நோண்ட முடியுமோ அதற்கும் மேல் மூக்கை நுழைத்த பெரிய ஊடகங்கள் இப்போது கமல் ஒரு பிரச்சனையில் சிக்கி இருக்கும்போது மட்டும் மௌனம் காப்பது ஏன்?!?

இந்த இடத்தில், கிட்டதட்ட ஆன்லைன் தினத்தந்தி போல் செயல்படும் பிரபல இணைய ஊடகமான தட்ஸ்தமிழ் தளத்தை பாராட்டியே ஆகவேண்டும். கமல் என்றாலே அவரின் கலைத்திறன்களை மட்டும் பாராட்டிவிட்டு, அவரின் வர்த்தக சாதனைகள், ரஜினி உள்பட பல நடிகர்களின், மானிலங்களிந் நடிகர்கள் படத்தையும் விஞ்சிய கமலின் வசூல் சாதனைகள் பற்றி மூச்சே விடாமல் கள்ள மௌனம் சாதிக்கும் இன்றய அச்சு ஊடகங்கள், இந்த தட்ஸ்தமிழ், சிலநாட்களுக்கு முன் கமலின் வர்த்தக சாதனைகள் பற்றிய ஒரு கட்டுரையை பதித்ததை எண்ணிப்பார்க்கவேண்டும். டிடிஹெச் விவகாரத்திலும் கமலுக்கு நல்ல தார்மீக ஆதரவை தட்ஸ்தமிழ் வழங்கி இருப்பது பாராட்டுக்குறியது.

ஒரு உலகத்தரமான கலைஞன், வியாபாரத்திலும் பல சாதனைகள் செய்திருப்பது, முடிந்தவரை நேர்மையாக இருந்தது, புதிய வியாபார உத்திகளை கையாண்டது என பல துறைகளிலும் சாதித்தது, தொடர்ந்து சாதித்துக்கொண்டு வருவது, இவற்றை எல்லாம், எதிர்த்து பின்னோக்கி இழுக்கப்பார்க்கும் வஞ்சக கூட்டம், அந்த வஞ்சனைய கள்ள மௌனம் சாதித்து ஆதரிக்கும் ஊடகம், இதுபோன்ற சாபக்கேடுகள் எல்லாம் நம் தமிழகத்தில் மட்டுமே காணக்கிடைக்கும் அதிசயங்கள். இதே மற்ற மாநிலமென்றால் தலையில் தூக்கிவைத்து கொண்டாடித்தீர்த்திருப்பார்கள். உதாரணம், கேரளாவில் 2010இல் தான் கமலுக்கென பிரத்தியேகமாக அம்மாநில முதல்வர் தலைமையில், கேரண அரசே ஒரு விழா எடுத்தது. இப்போது, கமல் நடித்த முதல் மலையாளப்படம் வெளியாகி 50 வருடங்கள் பூர்த்தியானதை தொடர்ந்து அதற்காக மற்றொரு விழா எடுக்க இருக்கிரார்கள் கேரளாவில். இத்தனைக்கும் கமல் நேரடி மலையாளப்படத்தில் நடித்தும் கூட பல வருடங்களாகிவிட்டன--
Enthusiasm is the Greatest Asset in the World. It beats Money, Power and Influence

Reply · Report Post