மு.கு: இந்த நெக்சஸ்7 தான் என்னோட முதல் 'smart' வெளாட்டுப்பொருள். இன்னுஞ்சிலதுல்லாம் வெளாடிப்பாக்காட்டியும் இப்ப தோன்றதச் சொல்லிடுறேன்.

நான் வாங்குனது:
1. படிக்க, 2. பாட்டுகேட்டுட்டேபடிக்க, 3. இணையம்

-

1. முகப்பு: தன்னிச்சையா எதையும் புரிஞ்சும், தேடியும் எடுத்திடமுடியுறதா மாத்திட்டாங்க ஜெல்லிபீனை. கணினிமாதிரி tooltipலாம் இல்லாதது கொஞ்சநாளைக்குக் குழப்பமா இருக்கலாம்னு நினைக்கிறேன். நெக்சஸ்7ன்னு பாக்கப்போனா, நல்ல வேகம், தெளிவான வடிவமைப்பு, கூகிள்தரும் சேவைகள் எல்லாம் ஒருங்கிணைந்ததன் பலம். நச்.

2. நூல்கள்: பொதுவா கூகிளோட நூலகத்துல புதுசெல்லாம் இருக்குதுன்னாலும் சிலது விலையதிகமா இருக்கு. ஏற்கனவே அமேசான் பயன்படுத்திருந்தா, கிண்டில்வழியா மத்தது விலைகுறைவா இருக்குறத வாங்கிக்கலாம். கிண்டில்மாதிரி இன்னும் பலதும் இருக்கு: கோபோ, நூக். இதெல்லாம் இல்லன்னாலும் நம்மோடதைத் தரவேற்றுறது எளிதே.

2.1: மேல சொன்னதையே பாட்டு,படம்னு எல்லாத்துக்கும் சேத்துக்கலாம். படம்/தொ.கா. பார்க்கறதுக்கு வசதியா இருக்கு.

3. படிக்கிறசூழல்:
3.1: வீட்டில் (விளக்கோட/பகலில்) படிக்கிறதுதான் சரியான சூழல். ஒளியளவு கண்ணுக்கு எரிச்சல் தர்றதா இல்லை. 2மணிநேரம் தொடர்ந்து உக்காரமுடியுது. வெளியில படிக்கிறதுக்கு அவ்ளோ சுகப்படல. glareஅடிக்குது. ஒளியளவைச் சரிகட்டிக்கணும். இரவுகளில் வீட்டில் படுத்தபடிபடிக்கிறதும் இப்டித்தான். பகல்/இரவுன்னு தேர்வுகளிருந்தாலும், (மெல்லிசாச்சும்) விளக்கோட படிக்கிறதே தேவலாம்.

3.2: கிண்டில் பயன்படுத்தினவங்களுக்கும் ஏதுவா இருக்குறாப்ல நூல்முகப்பைவடிவமைச்சிருக்காங்க. இடப்பக்கம்/வலப்பக்கம் தட்டினாலோ/தேய்த்தாலோ பக்கங்கள் புரள்வதும், பக்கத்தின் மேல்முனையில் தேய்த்தால் bookmarkசெய்யவும் வசதி. அதை அப்படியே பகிர்ந்துக்கலாம்.

என்னளவில் படிக்கிறதுக்காக வாங்கினதால நெக்சஸ் 7இன்சுஅளவில் கனமில்லாமல் இருக்குறது பெரும்பலம். ஒரேகையால் பிடித்தபடி மணிக்கணக்கில் படிக்கலாம்.

4. இணையம்: இது கண்டிப்பா கணினியல்ல, கணினியில் செய்வதையெல்லாம் இதுல செய்யமுடியும்னு நான் எதிர்பார்க்கவுமில்ல. சின்ன சின்ன appsவச்சு வெளாடலாம், பொழுதுபோக்கலாம், பாட்டுகேக்கலாம், படம்பாக்கலாம், வரையலாம், ட்விட்டர், ஜிடாக்னு பேசலாம், ஓரளவுக்கு இணையத்தில் மேயலாம். இதுல்லாம் செய்யற அளவுலதான் இதோட விசைப்பலகை இருக்கு. அடுத்ததா 10இன்சுஅளவுல கொண்டுவந்தாங்கன்னா படிக்கிறது எப்டியிருக்கும்னு தெரியல.

4.1: முக்கியமானது: செய்தியோடைகள் மூலம் சேதி,பதிவுகள் படிக்கலாம்.

5. மத்தபடி appsமூலம் செய்யக்கூடியவை நிறைய இருக்கலாம், அவ்ளவா பாக்கல.

நன்றி. வணக்கம்.

Reply · Report Post