Sharankay

sharankay · @Sharankay

2nd May 2012 from Twitlonger

ஞாநியுடன் பேசியதில் இருந்து: ராஜாவிடம் தமக்கு தனிபட்ட காழ்ப்பு இல்லை என்கிறார். அவர் சக கலைஞர்களை மதிப்பதில்லை என்றார். ஒவ்வொரு மேடையிலும் ராமசந்திரா, நெளசாத், எம்.எஸ்.வி, சுப்பராமன், பர்மன் என்று சிலாகிக்கிறாரே என்றேன். அது ராஜா தமது உச்ச நிலையில் இருந்து இறங்கிய பின்னே செய்கிறார் என்றார். எம்.எஸ்.வி. பொருளாதார ரீதியில் நலிந்த பொழுது ராஜா உச்சானி கொம்பில் இருந்தார், மதிக்க தெரிந்ததால் தான் 1984லிலேயே அவரை தேற்ற அவருடன் சேர்ந்து இசை அமைத்தார் என்றேன். உடனே ராஜா தம்முடன் வாசிக்கும் சக கலைஞர்களை மதிக்க மாட்டார் என்றார். சதா, விஜி, புரூ போன்றோரை குறிப்பிட்டு 35 ஆண்டு காலமாக அவருடனே இருக்கிறார்களே, மதிப்பில்லை என்றால் வெளியேறி இருப்பார்களே என்றதற்கு. வாழ்கை/பொருளாதார தேவைகள் என்று அடித்தார். கடந்த பத்து+ ஆண்டுகளாக ராஜா பொருளாதார ரீதியில் வெற்றுதானே வெளியேறி இருக்கலாமே என்றதற்கு, அவருடன் வேலை செய்த மற்றும் வெளியேறிய கலைஞர்கள் தனிப் பேச்சில் சொன்னதை வைத்தே முடிவுக்கு வந்ததாக சொன்னார். அப்போ வெறும் கிசுகிசு பாணியில் ஓரிடம் விட்டு வெளியேறிய பின் அவ்விடத்தை இகழும் கிழ்தரமான மனிததன்மையையா ஆதாரமாக கொள்கிறீர்கள் என்றால் ‘ஆமாம்’ என்று அடித்து விட்டார். தனிப்பேச்சில் ரஹ்மான் வீட்டுக்குள் இருந்து கொண்டே தாம் இல்லை என சொல்ல சொன்னதாக பல கலைஞர்கள்/இயக்குனர்கள் என்னிடம் சொல்லி இருக்கிறார்கள் அவைகளை ஆதாரமாக கொண்டு ரஹ்மானை நான் இகழலாமா என்றால் மடை மாற்றுகிறார்! சரி ராஜாவிடம் வேறு குறைகள் பார்க்கிறீர்களா என்றால் ‘இல்லை’ என்பதில் தெளிவாக இருக்கிறார். இந்த கேசட்டில் பெயர் போடுவதில்லை என்ற சின்ன விஷயத்தை வைத்தா தொடர்ந்து இந்த அவதூறு செய்கிறீர்கள் அதுவும் ரஹ்மானுடன் ஒப்பிட்டு என்றால், ஆமாம் என்கிறார். இது போல் மரபு உலக திரை இசை வரலாற்றிலேயே இல்லையே ஜான் வில்லியம்ஸ், ஜேம்ஸ் ஹார்னர் போன்ற எல்லோரும் மனித தன்மை அற்றவர்களா என்றேன். தாம் தமிழத் திரை இசைத் துறை பற்றி மட்டும் பேசுவதாக சொன்னார். ரஹ்மான் வந்து ஒரு மரபை துவங்கி வைத்தார் அதன் பின்பே ராஜா அதை பின் பற்றினார் என்றார். அதன் பின்பும் ராஜா பின் பற்ற்வில்லை என்றும் 1992க்கு பின் வந்த 100க் கணக்கான ஆல்பங்களில் குரு, காதல் கவிதை, மாயக்கண்ணாடி போன்ற என்னி விட கூடிய 10-15 ஆல்பங்களில் மட்டும் அப்படி இசை கலைஞர்கள் பெயர் வந்தது என்றும் அதன் முக்கியத்துவம் கருதி அல்லது விஷேச காரணங்களால் அப்படி நிகழ்ந்திருக்கலாம் என்றும், இன்னும் ராஜா உலக சவுண்ட்ராக் கம்போஸர்களின் பாணியிலேயெ இயங்குகிறார் என்றும் தெளிவுபடுத்தினேன். ஒப்பு கொண்டார். அப்போ இதில் என்ன பிரச்சனை என்றால் ’இது உங்களுக்கு பிரச்சனையா தெரியல எனக்கு தெரியுது’ என்கிறார். அடுத்து ஹவ் டூ நேம் இட் நிகழ்வில் நரசிம்மனை கூப்பிட்டு கெளரவிக்கவில்லை என்றார். இது ராஜா ஏற்பாடு செய்த நிகழ்ச்சி இல்லை என்றால், அவருக்கு தெரியாமல் நிகழ்ந்திருக்காது என்றார். நத்திங் பட் விண்ட் நிகழ்விலும் ‘ஹரி பிரசாத்தை’ அழைக்கவில்லை மற்றும் ரஹ்மான் தமது ஒவ்வொரு இசை நிகழ்ச்சியிலும் வாசித்த அனைவரையும் அழைக்கிறாரா என்றால், அவைகள் பர்ஃபார்மென்ஸுகள் பரவாயில்லை என்றும், ஆனால் இது 25ம் ஆண்டு வெள்ளிவிழா நிகழ்வு எனவே அழைத்து கெளரவித்து இருக்க வேண்டும் என்றார். 25ம் ஆண்டு என்பது தற்செயல் என்றும் நத்திங் பட் விண்டுக்கு பின் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவே பவதாரினி ஏற்பாடு செய்தார் என்றால், ஆனால் மக்கள் மனதில் இது 25ம் ஆண்டு விழா என்றே பதிய பட்டு இருக்கிறது என்றார். எனது விளக்கதிற்க்கு பின் புரிந்து கொள்ள தயாராக இருக்கிறிர்களா என்றால் ‘இல்லை’ நான் மக்களில் ஒருவன் எனவே இது வெள்ளி விழாவுக்காக கொண்டாடபட்ட ஒரு நிகழ்வு என்பதில் இருந்து மாற்றிக் கொள்ள தயாரில்லை என்றார். நரசிம்மனை அழைத்தாகவும் அவர் உடல்நிலை காரணமாக கலந்து கொள்ள முடியவில்லை என்று பவா’வின் வட்டம் தெரிவிக்கிறது என்றேன். இருக்க முடியாது என்றார். நரசிம்மனிடமே பேசி உறுதி செய்யலாமே என்றேன். செய்கிறேன் என சொன்னார். அவரே கூட இதை இவ்வளவு பெரிய விஷயமாக எடுத்து கொள்ள மாட்டார்ப் போல் என்றேன். இந்த விஷயத்தில் ரஹ்மானை இழுத்து ராஜாவை இகழ்கிறீர்களே இதே போல் சின்ன பட்ஜெட் படங்களுக்கோ பொருளாதார ரீதியில் தத்தளிக்கும் நபர்களுக்கோ ராஜா குறைவான சம்பளத்தில் அல்லது சம்பளம் இல்லமால் இசை அமைத்து இருக்கிறாரே இந்த நல்ல குணம் இல்லாமல் பெரிய பட்ஜெட், மார்க்கெட்டிங் என்றிருக்கும் பணக்கார ரஹ்மானை கெட்ட குணம் கொண்டவர் என்று இகழ்ந்து எழுதுவீர்களா என்றால். தேவை இருப்பின் செய்வேன் எனக்கு சார்புகள் கிடையாது என்றார். பார்ப்போம்.

Reply · Report Post