செம்மறியாட்டுக்குட்டியும், அன்பொழுகும் தமிழ்ப்புலியும் - குட்டிக்கதை By @RexArul

ஒரு ஊர்ல ஒரு புலி இருந்துச்சாமா. அது "பசுந்"தோல் போர்த்தியிருந்துச்சாமா. அதை ஒரு வெள்ளந்தி செம்மறியாடும் அதோட குட்டி செம்மறியாடும் ரொம்ப நம்புச்சாமா.

நல்லா போய்ட்டிருந்த செம்மறியாட்டோட வாழ்க்கையில காசு, பணம், அதிகாரம், மிரட்டல்ன்னு வாழ்ந்திட்டிருந்த புலி ஒன்னு, "நம்புங்க சாமியோவ், நீங்க என்னோட கஸ்டமர் இல்ல. என் குடும்பம் உங்களுக்கு துரோகம் செய்வேனா? நம்புங்க. மனசாட்சிக்கு பயப்படறவன் நான். கொடுத்த வாக்கை நிறைவேத்த முடியலைன்னா 'மயிர் நீப்பின் உயிர்வாழா கவரிமான்' கணக்கா சரியா தூங்க கூட முடியாதுன்னு" டப்பிங் இளசரசர் ஆரூர் தாஸ் டைலாக் எல்லாம் வுட்டு, நம்ப வச்சு குட்டி செம்மறியாட்டோட வாழ்க்கைய சூறையாடிடுச்சு புலி.

பச்சை நம்பிக்கை துரோகம்! "தொழுத கையுள்ளும் படையொடுங்கும்"னு பாடிட்டு பாடியாகிட்டார் என் ஆசான் வள்ளுவர். ஆட்டு குட்டிக்கும் செம்ம்றியாட்டுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. Epitome of innocence & trust is a sheep, whereas a goat is just the opposite!

அதிர்ச்சியில இருந்து மீண்டு, "அன்னை ஒரு ஆலையம்" ஸ்டைல்ல தேவர் பிலிம்ஸ் கணக்கா செம்மறியாடு நீதி கேட்க போனா, புலி மெரட்டுச்சு. "அட பைத்தியமே, வாய்மையே வெல்லும்னு போனா வாய்க்கு வெல்லம் இல்ல, ஒரு பிடி அரிசி போட்டுகிட்டு கண்ணம்மாபேட்டைக்கு போய் சாம்பல்தான் ஆகணும். என்னோட டாப் நடிப்பையும், வாக்கையும் நம்பி நீ மோசம் போனா, அதுக்கு நானென்ன பண்ணமுடியும்? நான் சாதாரண புலி இல்ல, தமிழ்ப்புலி. பண்ற டக்கால்டி வேலையெல்லாம் பக்காவா பண்ணி, "தமிழ் வாழ்க டமிழர் வாழ்க" கோஷம் போட்டா, கைதட்டி கரகோஷம் போட படை ரெடி. அதுனால ஒதுங்கு, அடங்கு. புலிக்கு முன்னால நீ ஒரு வெறும் செம்மறி. பேசாம போய் இளையராஜா 'மரி மரி நின்னே' கேளு, கூலாவு"ன்னு நக்கல் பேச்சு பேசுச்சு!

ஆனா சின்ன வயசுலேயே அம்மா செம்மறியும், தமிழாசான் செம்மறியும், "புலி"ய முரத்தாலேயே மொத்தி தொரத்திய தமிழ் பெண்ணின் வீர கதைகளை கேட்டு வளர்ந்த இந்த செம்மறி, மனுநீதிச்சோழன் கிட்ட ding dong bell அடிச்சு நீதி கேட்க வந்த பசு மாதிரியும் "மதுரை"ய எரிக்க வந்த பழம்பெரும் நடிகை விஜயகுமாரி போல தலைவிரி கோலமாக, அழுதுகொண்டே "தேரா மன்னா செப்புவது உடையேன்"னு டூப் போடாம Question கேட்டுச்சு.

ஆனா அந்த காலத்து மன்னன் போல "புலி" நெஞ்ச பிடிச்சுட்டு வுழவுமில்ல, தான் செஞ்ச தப்ப தப்புன்னும் சொல்லல. ஆனா தான் எப்படி ஒரு டக்கால்டின்னு பேசி எள்ளி நகையாடி, அப்ப அப்ப சோக சீன் பப்ளிக்லயும், புலி உறுமல் பிரைவேட் ஆவும் நடத்திட்டு இருந்துச்சு. தான் ஈன்ற காய் பாரம்னு நெனக்காத செம்மறி அந்த குட்டி ஆட்டுக்காக அனைத்தையும் இழக்கத்துணிந்து அந்த குட்டிக்கு ஒரு நல்ல ரோல்மாடல்ஆ இருக்கணும்னு துணிஞ்சு களத்தில் இறங்குச்சு.

இதுல பாருங்க, உண்மை தெரிஞ்சவங்களுக்கு மட்டும் தான் செம்மறியாட்டின் நிலை பரிதாபம் உண்மை நிலை அறியாதவர்களுக்கு "பசுந்"தோல் போர்த்திய புலியின் இழி நிலை பரிதாபம். ஆனால் உண்மையில் பாவம் குட்டியாடு. அதன் பரிதாபம் யாரும் அறிகிலர். ஏன்னா குட்டி செம்மறியாடு கூட Twitterல வந்து கூப்பாடு போட்டா தான் அதன் நிலை கூட தெரியும் ஒரு இழி நிலை.

அட அது குட்டி ஆடு. புள்ள, இலைய போட்டா ஆடும், வெளாடும், பாடும்னு அதை ஒரு பொருட்டா கூட பாவிக்காம பிரியாணிக்கு உல வச்சுது புலி.

இத்துடன் நிறைவு--கதைக்கும் இக்கதைக்கு மட்டும்! நீதிக்கும்,மனித உரிமைக்கும் நிறைவு என்பது எங்குமில்லை. மண்ணில் கரைந்தாலும்.

Reply · Report Post