கடலை சாகுபடி தொழில் நுட்பங்கள்

ட்விட்டர்: ட்விட்டர் மாவட்டத்தில் கோடை காலத்துக்கு ஏற்ற கடலை சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து வேளாண் துறை அறிவுரை வழங்கியுள்ளது.

ட்விட்டர் பயிற்சி நிலைய துணை இயக்குனர் கட்டதொர வெளியிட்ட அறிக்கை:

ஃபிகர்க்கடலை என அழைக்கப்படும் கடலை சாகுபடி செய்ய இது ஏற்ற தருணமாகும். ட்விட்டர் மாவட்டத்தில் சராசரியாக 5,000 ஃபாலொயர்களிடம் இப்பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.குறிப்பாக கரிசல் மண் பகுதியான சென்னை, கோவை மற்றும் மிடில் ஈஸ்ட் நாடுகளில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

நல்ல வகை கடலைகள் சாகுபடி மூலம் நல்ல ஃபிகர்களை பெற முடியும்.ட்விட்டர்கள் கடலை சாகுபடி தொழில் நுட்பங்களை கடைப்பிடித்து கூடுதல் ஃபிகர்களை பெறலாம். கடலை பயிர் சாகுபடி செய்ய குளிர் காலங்களான அக்டோபயர், நவம்பர் ஏற்றதாகும். எக்ஸாம் டைம் போன்ற நேரங்களில் ஃபிகர் மகசூல் குறைய நிறைய வாய்ப்பு உள்ளது. இப்பயிர் சாகுபடிக்கு குறைந்த பட்ச ஆங்கில அறிவும், நிறைய மொக்கையும் தேவை படுகிறது.


இப்பயிருக்கு நிறைய ஃபிகர் கூட்டம் இருந்தால் மிகவும் உகந்தது. புது ஃபிகர்களிடம் போட நிலக்கடலையும், ஆண்டிகளிடம் போட கொண்டை கடலையும் ஏற்றதாகும். ஒரு 10 ஃபிகர் உள்ள டைம் லைனுக்கு 10 அல்லது 15 கடலைகள் போதுமானது. ஃபிகருக்கு ஃபிகர் நல்ல இடைவெளி இருக்குமாறு விதைப்பு செய்ய வேண்டும். டைம் லைனில் போடும் கடலைகள், அந்த அந்த ஃபிகருக்கு போட்டாலும், ஃபெயிலியர் ஆகும் பட்சத்தில் அடுத்த ஃபிகருக்கு உதவகூடும். அதானால் டிம்ல் போடும் கடலைகளுக்கு அதிக மகசூல் கிடைப்பதில்லை.

விதை நேர்த்தி செய்ய ஒரு ஃபிகருக்கு 2 மொக்கை அல்லது நான்கு தத்துவம் கலந்து கட்டி அடுத்து அரை மணி நேரம் வைத்திருந்து பின் நுண்ணுயிர் உரமான ’கவிதை ட்விட்டு’ போட வேண்டும். கடலை சரியான மகசூல் கிடைக்காது என்பது தெரிந்தபின், ஃபிகரை மாற்றி கொள்ளலாம். ஃபேக் ஐடிகளிடம் போடும் கடலைகள், சொத்தையாகி மகசூல் பாதிக்கும் ஆபத்து உள்ளது.

கடலை சாகுபடிக்கு, சொரணை சுத்தமாக இல்லாமல் இருப்பது மிகவும் நல்லது. கடலைக்கு எதிரான ரெஸ்பான்ஸ் கிடைத்து, செப்பல்ஸ் அடி கிடைக்கும் பட்சத்தில் ‘சண்டையில கிழியாத சட்டை எங்கிருக்கு’ போன்ற ட்விட்டுகள் போட்டு, ஒரு நாள் நிலத்தை ஃப்ரியா விட வேண்டும்.

சில பருவங்களில் ட்விட்டரில் கடலை சாகுபடி சரியாக வராத போது, ஃபேஸ்புக் போன்ற குளிர் பிரேதேசங்களில் முயற்சி செய்யலாம். ஜிப்ள்ஸ் ஒரு வறண்ட பாலையாக அறியபடுகிறது. வேறு வழியே இல்லையானால் அங்கும் கடலை சாகுபடி முயற்சி செய்யலாம்.

’மன்னிப்பாயா…மன்னிப்பாயா’ போன்ற உர பாட்டு ட்விட்டுகள் அனானியாக பாடும் போது, ஃபிகர்கள் எதுக்கு மன்னிக்குறோம் என தெரியாமலே மன்னிக்க வாய்ப்பு உண்டு. நமக்குதான் பாடுறானோ..என ஃபிகர்கள் குழம்பி மகசூல் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.

விதைக்கும் முன் அடியுரமாக நல்ல பர்சானிலிட்டி ப்ரொஃபைல் போட்டோ இட வேண்டும். கடலை பயிரில் தோன்றும் வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்த விதைத்த மூணாம் நாள், ‘சாப்டாச்சா? பிசியா?’ போன்ற இன்றியமையாத ட்விட்டு உரங்கள் இடவேண்டும். கடலை சாகுபடிக்கு கூட்டம் உதவாது, அது களைகளுக்கு வழிவகுக்கும். அதானால் யாரும் சந்தில் இல்லாத நேரத்தில் விதைக்கும் கடலைகளுக்கு நல்ல மகசூல் உண்டு . கொஞ்சம் இலக்கியம், கிரந்தம் போன்ற உரங்கள் சேர்க்கும் போது ஃபிகர்ககள் குழம்பிபோய்..நமது கோணிபையை நிரப்ப வாய்ப்பு அதிகம்.ஒலக இலக்கியம் போன்ற உரங்கள், கடலை போடுபவரின் வயதை அதிகமாக காமிக்கும் வாய்ப்பு உள்ளதால் அதை தவிற்க்கலாம்.

இப்பயிர் அதிக பராமரிப்பு செலவில்லாமல் மானவாரியில் 10 நாட்களில் முதிர்ச்சி அடைந்து சந்துக்கு சுமார் 3 முதல் 4 ஃபிகர் மகசூல் கிடைக்கலாம். ட்விட்டர்கள் தங்கள் பகுதி வேளாண் விரிவாக்க மையத்தில் கிடைக்கும் சான்று பெற்ற விதைகளை கட்டதொரயிடைம் வாங்கி சாகுபடி செய்து அதிக மகசூல் பெற்று பயன்பெறலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Reply · Report Post