தோழர்கள் அனைவருக்கும் சிறு வேண்டுகோள். இப்பொழுது நாம் #KillingFields கீச்சுவதன் நோக்கம் என்ன? அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டுமென்றா? அதான் இன்று ஆதரவு தருவதாய் பாரத பிரதமர் அறிவித்து விட்டாரே, இத்தோடு முடித்துகொள்வோமா??? இல்லை தீர்மானம் நிறைவேற வேண்டும் என்கிறீர்களா?? மார்ச்சு 23 தீர்மானம் நிறைவேரியதுடன் நிருத்திகொள்வோமா?? (தீர்மானமே உபயோகமற்றது என்ற கருத்து இருந்தாலும some thing is better than nothing) நாம் என்ன செய்கிறோம் என்ன செய்ய விரும்புகிறோம்??? ஈழ தமிழரின் வாழ்வில் மாற்றம் தான் குறிக்கோள் என்றால், காஞ்சி மன்ற தோழி நேற்று குறிப்பிட்டதுபோல் விஷயம் அறிந்த நமக்குள் கீச்சிகொல்வதால் ஆகப்போவது என்ன? கீச்ச வேண்டாம் என கூறவில்லை அனால் அதையும் தாண்டி செய்ய வேண்டியது நிறைய. பெரிதாய் எதுவும் வேண்டாம். உங்களால் இயன்ற சிறு சிறு முயற்ச்சிகள்.
1) தமிழரில் ஈழத்தின் கோரம் அறிந்தவர் எதனை சதவிகிதம்? சந்தின் வெளியே நீங்கள் அறிந்த எத்தனை பேர் இதை பற்றி அறிவார்? ஊடகங்கள் கடமை செய்ய தவறும் பொழுது மக்களிடம் கொண்டு சேர்ப்பது நமது கடமை அல்லவா? சந்தில் பேசுவதை விட அதிகம் இதைபற்றி வெளியே பேசுங்கள், அனைவருக்கும் இதை பற்றி கூறுங்கள். நேற்று வந்திருந்த 2000 பேரில் டிவிப்ஸ் விரல் விட்டு என்ன கூடிய அளவுதான். சாலையில் போராடும் குணம் மற்றவரிடம் அதிகம், முடிந்த அளவு அவரிடம் உண்மையை கொண்டு சேர்ப்போம். பெருநதி பயணிக்கையில் பக்கதிருக்கை பயணியிடம், வீட்டு வேலை செய்பவர் முதல் சந்திக்கும் அனைவரிடமும் பகிர முயல்வோம்.
2) மற்றொரு தோழர் கூறியது போல் மாவட்டம் தோறும் உள்ள அகதிகள் மறுவாழ்வு முகாமில் அடைபட்டு கிடக்கும் உடன்பிறப்புகளுக்கு உங்களால் ஆன உதவிகள் செய்யலாம், பணமாக அல்லாமல் தகுதியானவர்களுக்கு வேலை வாங்கி தரலாம், அல்லது அடிப்படை கழிப்பிட வசதி கூட இல்லாதவரின் வாழ்வாதாரத்தை உயர்த்தலாம், மூன்று வேலை உணவு முழுதாய் உன்ன வழி இல்லாத நிலைமையில் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்க.உதவ பணம் வசதி இல்லை என்பது தடை இல்லை, உதவ பலர் தயாராய் இருக்கிறார்கள், உங்களிடம் நேரம் இருந்தால் இருவருக்கிடையேயான பாலமாய் இருக்கலாம்.
உங்கள் ஆதங்கத்தை கீச்சுவதால் மட்டும் கடமை தீர்ந்து விட வில்லை, இங்கு தரும் குரலால் கடல் தாண்டி வாழ்வாரின் நிலையில் மாற்றம் உடனடியாக ஏற்ப்பட போவதில்லை, நமதருகில் நம்முன்னே வாழ்பவரின் வாழ்வில் மாற்றம் கொண்டு வர முடிந்தால் அதைவிட பேறு ஏது? சந்தில் பொங்கி தெறிக்கும் உணர்ச்சிகளை தயவு செய்து ஆக்கபூர்வமாக உபயோகிப்போம் .

Reply · Report Post