nallapodiyan

R M Sagar · @nallapodiyan

17th Jan 2012 from Twitlonger

ராஜா நிகழ்ச்சி ட்வீட்ஸ்
----------------------------------------------------------------------------------------------------------------------------

@kryes

->அத்தனை வயலின்கள் - நடுவே ஒரே ஒரு புல்லாங்குழல் - பல சிங்கங்களிடம் மாட்டிய யானை! தவிக்கிறாள் தோழி....பருவமே...#Raja

->(இது என் கருத்து மட்டுமே) சித்ரா-வில் சுசீலாம்மாவின் தேன் குரலும் இருக்கு! ஜானகியின் மதுக் குரலும் இருக்கு!:) Chitra is so musical #Raja

->கிளாரினெட், நாதஸ்வரம், சாக்ஸபோன் - மூன்றும் Jazz க்கு கம்பீரம் என்பதை #Raja is proving again and again!

->Flute Interludes of #Raja, alone is a Big Research! கண்ணன் ஒரு கைக்குழந்தை!

->உயிரில் கலந்து பாடும் போது, "எதுவும்" பாடலே - #Raja இது தான்டா இசையின் இலக்கணம்! மற்றெல்லாம் தலைக்கனம்!

->ராஜா எழுதி + இசை கூட்டிய பாடல்கள் - அபூர்வ முத்துக்கள் - are always simple - just 3 notes! = இதயம் ஒரு கோவில்!

->யேசுதாஸ்-க்கு வயது அதிகமாகி விட்டதோ? SPB-இடம் அவ்வளவாகத் தெரியவில்லை நடுக்கங்கள்! ஆனாலும் யேசு, கலக்குறாரு! laptop singer:)

->ராஜா இசைக்கு வயலின் வாய் என்றால், சிதார் & வீணை - இரண்டு செவிகள்! நானாக நானில்லை தாயே-வில் சிதார் கொஞ்சுவதைக் கேட்கும் சுகம்ம்ம் #Raja

->ராஜா-வைத் திரையில் பார்க்கும் போதே.....இசை என்றும் வீழாது வாழும்-ன்னு மனது முணுமுணுக்கிறது! வாழ்க இசை!

->விழியிலே மலர்ந்தது - ஆகா! SPB! Orig ஆண் பாடகர்கள் அமைந்தது #Raja நிகழ்ச்சியின் நற்பேறு! Orig பெண் பாடகர்கள் இன்னும் வந்திருக்க வேண்டும்!

->#Rajaவின் அந்தப் புல்லாங்குழல் கலைஞருக்கு என் வந்தனங்கள்! மிக அருமையான கோர்வை இழுப்புகளை அனாசியமா வாசிக்கறாரு!

->பாடகர்கள் யேசுதாஸ், SPB, பாலமுரளி, மனோ எல்லாம் வரமுடிந்த போது, பாடகிகள் சித்ரா மட்டும் தானா? Why #Raja ?:( புதுப்பாடகிகள் Vs ஜீவன்:(

->ஆயிரம் தாமரை மொட்டுக்களே - SPB குரல் வெங்கலம், பெண் குரல்....ஊம் ஊம்! You cannot replace Janaki #Raja

->சித்ரா பாடும் போது, எந்த மிகையோ, அங்க சேஷ்டையோ இல்லை! உணர்ச்சிகளை உடம்பு ஆட்டத்தில் காட்டாமல், இசை வழியாகவே கொட்டுகிறார் #Raja

->#Raja வின் கரகர ஆண்மைக் குரலுக்கு, சரியான பெண்மைக் குரல் = சித்ரா #Raja லல லல லலலா....ஒரு ஜீவன்...

->பூங்கதவே தாள் திறவாய் - Bubble (எ) நீர்க்குமிழி-க்கும் இசை குடுக்க வல்ல #Raja

->ஆறு அது ஆழமில்ல-ன்னு High Pitchஇல் வெளுத்து வாங்கிய உமா ரமணனா இது?:(( #Raja

->#Raja கைய வச்சா பாட்டைக் கத்தியே கெடுத்தாரு யுவன்!:) பாட்டை விடச் சேட்டைகளையே ரசிக்க முடிந்தது

->வயலின், கிட்டார், புல்லாங்குழல், வீணை/சிதார் = Four Pillars of #Raja ஆர்மோனியம் = Heart of #Raja

->ஏதோ மோகம் ஏதோ தாகம்..பக்கெட் தண்ணிக்குள் அலை ஓசை...#Raja இசை நுட்பங்கள்!

->#Symphony ஐப் பேச முடியாது - #Raja இசைப் பேச்சு vs இசை வீச்சு!

->#Symphony க்கு மட்டும் #Raja உணர்ச்சிப் பிழம்பா இருக்காரு!.....இதயம் போகுதே

->பாட்டெழுத கண்ணதாசன் யோசித்ததே இல்லை! தானா வரும்! நான் எப்படி Music போடுறேனோ, அப்பிடி அவரு பாட்டு போடுறாரு - #Raja

->கவிஞர் கண்ணதாசன் மாதிரி ஒரு கவிஞர் உலகத்துலயே இல்லை - #Raja #UniversalTruth

->ரகசிய ராகத்தைப் பாடி....ரகசியம் போல் குனிவது...எத்தனை வயதானாலும், குரல் சற்றே தடுமாறினாலும்...பாலமுரளி இனிமை குறையவே இல்லை #Raja

-------------------------------------------------------------------------------------------------------------------------

@nchokkan

->ஆடியன்ஸ் எல்லாம் கூடப் பாடுகிறார்கள், வழக்கமாக இதுபோன்ற நிகழ்ச்சிகளில் ஆடுவார்கள் :>

->ராஜாவுக்கு வாசிப்போர் முகத்தில் சீரியஸ்னெஸும் புன்னகையும் சமவிகிதத்தில்!

->SPB குரல் அப்படியேதானிருக்கிறது

->S. N. சுரேந்தர் வந்திருக்கிறார், ஒரு பாட்டு பாடியிருக்கலாமே சார் #பாரிஜாதப்பூவே

->சித்ராவின் பெருந்தன்மையைப் பாராட்டணும், அவர் பாடிய ராஜ முத்துகள் நூற்றுக்கணக்கில் இருக்க, இந்த மேடைக்காக மற்றவர் பாடல்களை ஏற்றுப் பாடுகிறார்

->இத்தனை செய்தவர்கள் ஒவ்வொரு பாடலையும் எழுதியது யார் என்றும் சொல்லியிருக்கலாம் (இதுவரை பெரும்பாலும் வாலி, ஒன்று வைரமுத்து)

->ஏதேனும் ஓர் இசைத் துணுக்கு தவறாக விழும்போது ராஜா முகத்தில் தெரியும் சங்கடம், கோடி பெறும்

-------------------------------------------------------------------------------------------------------------------------

@kanapraba

-> இப்போதைய இசையமைப்பாளரின் வாத்தியங்கள் மேய்ப்பரில்லா ஆடுகள் என்பதை உணரமுடிகிறது #ராஜா என்னும் மேய்ப்பர்

-> ராஜா நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் பிரபலங்கள் தாங்கள் இசை ரசனையால் உயர்ந்தவர்கள் என்பதை ஏற்க வைக்கிறார்கள் #Jeyatv

-> என்றென்றும் ராஜா நிகழ்ச்சி உத்தியோகபூர்வ டிவிடியாகவும் வருகின்றதாம்

->புத்தம்புதுக்காலை பாடலை இனியும் கூடப் புதுப்படமொன்றுக்குப் பயன்படுத்தலாம் அப்படியே #Jeyatv

->எங்கள் அசையும் அசையா இசையாய் வாழும் சொத்து இளையராஜா

->தேவி ஸ்ரீ பிரசாத் எஸ்பிபியோடு பாடுகிறார் பார்வையாளர் அரங்கில் இருந்து #JeyaTV

->அருண்மொழி வாசிக்காத புல்லாங்குழல் இசையை மீள வாசிக்க ஒரு வாய்ப்பு # நானாக நானில்லை தாயே #JeyaTV

->இசைத்தாயின் அரவணைப்பில் இப்போது இணைந்திருக்கிறேன் #ஜெயா டிவி என்றென்றும் ராஜா

->நேரு உள்ளரங்கில் உள்ளோர் ஒவ்வொருவரும் ஆயிரமாயிரம் ரசிகர்களின் பிரதிநிதிகள் #JeyaTV

-------------------------------------------------------------------------------------------------------------------------

@kavi_rt

->சைக்காவ்ஸ்கி’யின் ’ஸ்வான் லேக்’ இசை கேட்ட உணர்வே அழகர்சாமியின் குதிரை பின்னணி இசை கேட்டபோதும் #ராஜா கொண்டு சேர்த்த இடம்

->இசை தொழில்நுட்பத்தில் இல்லை! இல்லவே இல்லை!!

->ஜனனி ஜனனி பாடல்தான் ராஜசாம்ராஜ்யத்தின் தேசியகீதம் #இளையராஜா

->என்னவொரு குரல்! அன்று கேட்டது அப்படியே வருஷங்களுக்குப் பிறகும் #பாலமுரளி கிருஷ்ணா

->அந்த ஹங்கேரி ட்ரம்மர் முகத்தில்தான் எவ்வளவு சந்தோஷம்! #சுந்தரி கண்ணால் ஒரு சேதி

->விழியிலே மலர்ந்தது (புவனா ஒரு ?), அழகே அழகு (ராஜபார்வை), உறவுகள் தொடர்கதை (அவள் அப்படித்தான்) ராஜாவின் மினிமலிஸ்ட் பியூட்டிஸ்

->விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது #இனிய அதிர்ச்சியென்றால் அது இது! #என்றென்றும் ராஜா

->காலையிலிருந்து சாப்பிடவில்லை என்பது வேறு சாப்பாடே தேவையில்லை என்று உணர்வது வேறு. #இசையுண(ர்)வு

->பிரபாகர் சோலோ வயலின், நெப்போலியன் ஃப்ளூட், அந்த நாதஸ்வர, மிருதங்க கலைஞர்கள். வாட் எ பெர்ஃபார்மன்ஸ்! #பூங்கதவே தாழ்திறவாய் #இசைக்கடவுள்

->இதுதான் காலத்தால் அழியாத இசை! #பூங்கதவே தாழ்திறவாய் ப்ரீலூட்

->தமிழர்கள் கேட்ட சிம்ஃபனிகளுள் ஒன்று - ஏதோ மோகம் #என்றென்றும் ராஜா

-------------------------------------------------------------------------------------------------------------------------

@mayilsenthil

->ஜெயச்சாவின் தொடைதட்டல்தான் நமக்கெல்லாம் இத்தனைநாள் முதுகுத்தட்டலாக இருந்திருக்கிறது. #ராஜா #jaya tv

->ஒரு நிமிசங்கூட வேறெங்கயும் கண்ணை நகர்த்தமுடியவில்லை. நேரில் பார்த்தவர்கள்மேல் பொறாமைகூடுகிறது. :-/ #jaya tv

->சாரணர் இயக்க அணிவகுப்பாய்ப் பார்வையாளர்கள் அமர, சித்ராபாட, ராஜா ஆட்டுவித்தபடி சிரிப்பதும் ராஜாங்கமே. #jaya tv

->சதானந்தம்/அருண்மொழி தனித்துவத்துடன் தனியே நடைபோட்டுச்செல்லுகிறார்கள், ராஜபாட்டையில். #jaya tv

->'ராகங்கள் கோடிகோடி, *அதுவும்* புதிதில்லை' என்று ராஜா காற்றில் கையை விசிறியடிக்கும் நொடி, அது இன்பம். #jaya tv

->ராஜாவின் இசை இசையாய் இருப்பதற்கு - கருவிகள் அதன்தன் அளவில் சரியாக இருப்பதுதான் காரணமோ என்று யோசித்ததுண்டு.

-------------------------------------------------------------------------------------------------------------------------

@writerpara

->ஆயிரம் சொன்னாலும் நேரடிக் கருவிகள் தரும் இசையனுபவத்தை எலக்டிரானிக் இசை தருவதில்லை.

->சித்ரா அருமையாகப் பாடுகிறார். சுசீலாவுக்கு துளி துரோகமுமில்லை.

->இந்நிகழ்ச்சிக்கு இதைவிடச் சரியான தொடக்கம் இருக்க முடியாது. ஜனனிக்குப் பிறகு அம்மா என்றழைக்காத.

->சித்ரா தந்தேன் என்று உச்சரித்தால் டன் தேன் சொரிகிறது.

->பாலமுரளி குரலெல்லாம் ஆணியடித்தாற்போல் நின்று ஆடும்போது உமாரமணன் குரல் இப்படி தொளதொளத்துவிட்டது வருத்தமளிக்கிறது.

->ஜென்மத்தில் இனியொருமுறை இப்படிப்பட்ட அனுபவம் வாய்க்குமா? இசைக்கடவுளுக்கு நன்றி.

-------------------------------------------------------------------------------------------------------------------------

@TPKD_

->இன்னமும் கத்துக்கிறேன் என்று 70 வயது பெரியவர் சொல்லும் போது நமக்கெல்லாம் கொஞ்சம் வெட்கம் வருவது தான் இயல்பு ;-)

->எந்த எந்த இசைத் துண்டு எந்த எந்த இசைக்கருவி என்று காண ஒரு அரிய வாய்ப்பு. பல பாடல்களில் தெரியாமல் குழம்பிருக்கேன்..
புல்லாங்ககுழல் சொற்களுடன் பாட்டாகவே பாடும் போலயே.

--------------------------------------------------------------------------------------------------------------------------

@Alex_Pandian

->அடடே !! கண்ணன் ஒரு கைக்குழந்தை - ரெக்கார்டிங்க் ஆனது கோகுலாஷ்டமி அன்றாம் - என்ன ஒரு coincedence - Jaya TV #Raja

->இவ்வளவு வயலின் கலைஞர்களையும் ஒருசேர பார்க்க, கேட்க எத்தனை அருமையாக இருக்கிறது - ராஜாவின் ஸ்பெஷாலிடியே வயலின் interludes தான் Jaya tv

--------------------------------------------------------------------------------------------------------------------------

@kaarthikarul

->இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம் - இளையராஜாவுக்கு மட்டுமே சாத்தியம்

--------------------------------------------------------------------------------------------------------------------------

@anbudan_BALA

->ராஜாவைப் பற்றிய பின்னணி வர்ணனை சிலிர்க்க வைப்பதாய் இருந்தது! சொன்ன அத்தனையும் உண்மை #JayaTV

->அடியார்கள் வாழ அரங்கநகர் வாழ, ராஜாவின் இசை வாழ, ராஜாவே! இன்னுமோர் நூற்றாண்டு இரும்! #JayaTV #Raja

-------------------------------------------------------------------------------------------------------------------------

@akaasi

->தமிழகத்து இந்தி திணிப்பு எதிர்ப்புக்கு பாடுபட்ட அமைதியான போராளி இளையராஜா! என்றும் வாழ்கவே!

->இளையராஜா மட்டுமில்லாமல் மற்ற மூத்த பாடகர்களையும் ஒருங்கே காணுவது நிகழ்ச்சியின் சிறப்பு. எஸ்பிபி, ஏசுதாஸ்,...

------------------------------------------------------------------------------------------------------------------------

@iKrishS

->ராஜா வின் இசை நிகழ்ச்சி.prelude,interlude களுக்கானது..

------------------------------------------------------------------------------------------------------------------------

@umakrishh

->ராஜாவிற்கு வாசிப்பவர்கள் மந்திரத்திற்கு கட்டுப் பட்டவர்கள் போல இருக்கின்றார்கள் #அவ்வளவு பயபக்தி :)

->எப்படி காட்சியமைக்கக் கூடும் என்று கற்பனை செய்தே இசைத்திருக்கிறார் மனிதர்:) #ilayaraja

->கைதட்டச் சொல்லி கெஞ்சுவாங்க பல நிகழ்ச்சிகளில்.அவசியமின்றி ஆரம்பம் முதல் இப்போ வரை ரசிகர்களின் உற்சாகக் கூக்குரல் ஒவ்வொருமுறையும் #raja

->இதயம் போகுதே பாடலும் அந்த #Symphony இசையையும் நேரில் கெட்டவர்கள் ஜென்ம சாபல்யம் அடைந்திருப்பார்கள்

->ராஜா கைய வச்சா பாடலை யுவன் இன்னமும் சிரத்தை எடுத்து நன்றாகப் பாடி இருக்கலாம் எனத் தோன்றியது

-------------------------------------------------------------------------------------------------------------------------

@DrTRM

->இந்த ஒரு பாட்டு மட்டும் போதும் #ஜனனி #jayatv

---------------------------------------------------------------------------------------------------------------------------

@geethuTwits

->SPB பாடுறத ரசிக்கிறதா, அத ரசிச்சிட்டு இருக்கிற ராஜாவ ரசிக்கிறதா!!!! என்ன ஒரு காம்பினேஷன்!

-------------------------------------------------------------------------------------------------------------------------

@rsGiri

பூங்கதவே தாழ்திறவாய் - குரலினிமையைவிட பின்னணி இசைச்சிறப்பை கேட்க ஆயிரம் செவிகள் வேணும். நேரில் பார்த்தவர்கள் புண்ண்யம் கோடி செய்தவர்கள்

------------------------------------------------------------------------------------------------------------------------

@arulselvan

ராஜா டீமில் ஒவ்வொரு கலைஞனும் அசுர வித்துகளப்பா.

------------------------------------------------------------------------------------------------------------------------

@Nila_Here

இன்னும் பலமுறைக் கூட யேசுதாஸ் தவறாக துவங்கியிருக்கலாம் :-) #பூவே செம்பூவே #Rocking

------------------------------------------------------------------------------------------------------------------------

@NVaanathi

ராஜாவின் கன்சர்ட்டில் பார்த்த பாடல்களின் ஒரிஜினல் கேட்கும் போது, பாடல்காட்சிகள் மறைந்து கன்சர்ட் காட்சிகளே கண்களில்.

Reply · Report Post