கமல்ஹாசன் ஸ்பெஷல் கவிதை

மேட்ரிமோனியல்.காம்

முதல் தீண்டலுக்கு உடல் சிலிர்த்து
வெட்கத்தில் புன்னகைத்து
கடற்கரையில் காற்று வாங்கி
கைபிடித்து பரவசமாய் நடந்து
கன்னத்தில் லேசாய் முத்தமிட்டு
கைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பி
கண்களால் பேசிச் சிரித்து
கால் கடுக்க காத்திருந்து
காது பிடித்து மெல்லத் திருகி
கண்ணீரோடு கட்டியணைத்து
கண்பொத்தி விளையாடி
இடிக்கு பயந்து தோளில் சாய்ந்து
செல்லமாய் நெஞ்சில் குத்தி
பேசாமல் இருந்து தவிக்கவிட்டு
கோயில் சுற்றி, குளம் சுற்றி
மழை ரசித்து நனைகையில்
துப்பட்டாவில் குடை விரித்து
புத்தகத்தில் கடிதம் மறைத்து
மணிக்கணக்கில் தொலைபேசி
அப்பாவின் அதட்டலுக்கு அஞ்சி,
“அவர் ரொம்ப நல்லவர்மா” என
அழுது புலம்பி அம்மாவிடம் சொல்லி
ஒருவழியாய் வெற்றி கொள்கிற
காதல் திருமணங்கள் போல
இனிப்பதில்லை
இன்டர்நெட்டில் தேடியலைந்து
பத்துக்குப் பத்து பொருத்தம் பார்த்து
பண்ணுகின்ற திருமணங்கள் !


-- கமல்ஹாசன்


Thanks: Kungumam, 11.04.2011

http://bit.ly/eFxHAQ

http://bit.ly/hfri16

Reply · Report Post